பட்டயமா உனக்குமது?

பணம் இல்லை
பதவி இல்லை
பகிர நட்பு இல்லை - பிறகு
பகட்டான வாழ்வெதற்கு
பட்டமான படிப்பெதற்கு
பண்பான உறவெதற்கு - உடல்
பற்றுள்ள உயிரெதற்கு
பட்டயமா உனக்குமது?

படிகாரம் எனும் பெயரில் - தனக்கு
பரிகாரம் செய்து கொள்ள - கோள்
பழிச் சொல்லும் சோதிடர்கள் - உடல்
பற்றுள்ள உயிரெதற்கு
பட்டயமா உனக்குமது?

பஞ்சமான நிலை
பகைமையாக்கும் செல்வம்தனை
பறந்திடும் எண்ணங்கள்
பணித்திடுமா உள்ளம்
பசித்திடுமா மனநிலை - ஆகுமா
பசுமையான சூழ்நிலை - உடல்
பற்றுள்ள உயிரெதற்கு
பட்டயமா உனக்குமது?

பழமையான காலநிலை
பதுங்கின விதிநிலை - இன்று
பரிதவிக்கும் மனநிலை
பரிந்துரைக்கும் மருத்துவம்
பகல் தூங்கா இரவு தூங்க
பழக்கமான சூழ்நிலை
பனியாக கரைந்திடும் பிணியென - உடல்
பற்றுள்ள உயிரெதற்கு
பட்டயமா உனக்குமது?

பல வண்ண மாத்திரைகள்
பட்டியலிட்ட வேளைகளில்
பக்குவமாய் உணவோடு உண்டிட்டால்
பசையான வியாதிகள் உடலில்
பசியோடு பிணியும் பறந்திடுமாம்
பரிந்துரைக்கும் மருத்துவர் செல்வமாக
பலரும் பிணியோடு, பிணியே வாழ்வாக - உடல்
பற்றுள்ள உயிரெதற்கு
பட்டயமா உனக்குமது?



எழுதியவர் : avighaya (26-Aug-10, 11:38 pm)
சேர்த்தது : avighaya
பார்வை : 302

மேலே