இளைஞனே!

இளைஞனே!

காலமொரு விதியல்ல
காட்சிகளும் பொய்யல்ல
விதைத்து நீயன்றோ
வெறுப்பது தவறன்றோ...

தனிமையாக நீயிருந்து
கடந்தவைகளை சிந்தித்தால்
கதையாகும் பல உண்மை
காரணம் உன் எண்ணமென.

விதியெனும் பெயரில்
அதிர்ஷ்டம் எனும் சொல்லெடுத்து
காலம் வருமென காத்திருந்து
கலங்கி நீ நின்றால்
எள்ளி நகையாடும் உலகன்றோ....

இளைஞனே!
இச்சைகளைக் கலைத்தெறி
இம்சைகளைத் துவம்சமாக்கு
உன்னின்றி யாரால் முடியும்.

உள்ளிட்டு சிந்தித்தால்
தினமும் அதை சுவாசித்தால்
கனவுமதை கண்டிட்டால்
கண்டிடலாம் கண்முன்னே
கனவும் நிஜமான வாழ்வுதனை.

இளைஞனே!
உன்னின்றி யாரால் முடியும்.

எழுதியவர் : avighaya (27-Aug-10, 12:02 am)
சேர்த்தது : avighaya
பார்வை : 384

மேலே