நீங்களும் கதை எழுதலாமே..! பொள்ளாச்சி அபி

வணக்கம் நண்பர்களே..!நீங்கள் சிறுகதைகள் எழுதுவதாயிருந்தால்..எனது சில ஆலோசனைகளைத்தரலாமா..?

அப்படியானால் தொடர்ந்து படியுங்கள்..

பொதுவாக கதையின் ஆரம்பத்தை,படிக்கும் வாசகர்களுக்கு கதையின் போக்கு ஓரளவு இப்படித்தான் இருக்கும் என்ற யூகத்தைக் கொடுத்துவிடும்.வாசகனின் மனஓட்டத்திற்கு பொருத்தமாய் கதையின் முடிவும் அமைந்துவிடும்போது..அதில் பெரிய சுவாரஸ்யம் இருக்காது.அதனால் கதையின் போக்கு இப்படித்தான் இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கும்போது,சடார் என்று ஒரு ட்விஸ்ட்.அது அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அமையும்போது,கதை அங்கே வாசகனின் மனதில் சம்மணம்போட்டு உட்கார்ந்து கொள்ளும்.
அதுவே கதைக்கான வெற்றி...!

நான் இதுபோலவேதான் பெரும்பாலும் எழுத முயற்சித்துவருகிறேன். எழுத்து.காமில் உள்ள எனது கதைகள் அனைத்தும் இவ்வாறே அமைந்திருக்கும்.வாய்ப்பு இருப்பின் படித்துப் பாருங்கள்..!
தொடர்ந்த உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.!

அப்புறம், உங்களுக்காக ஒரு சின்….ன கதை..

தனது தூக்கத்தை கலைக்கமாட்டானா..என்ற ஏக்கத்தில் அவள்.அவளது தூக்கம் கலைந்துவிடுமே.., என்று அவன்..,நாட்கள் ஓடுகின்றன.

ஓரே வீட்டிலிருந்தாலும்,ஒவ்வொரு இரவும்,அவர்கள் நிலை இப்படியே தொடர்ந்தது.

ஒரு ஆவேசத்தில் தொடுத்த வழக்கிற்காக. கோர்ட்டிலிருந்து விவாகரத்து என்று தீர்ப்பு வரும்வரை..!.


அவ்வளவுதான் கதை..கடைசி வரியின் தொடர்ச்சியாக,மீண்டும் முதல் வரியிலிருந்து படித்துப்பாருங்கள்.
அன்புடன் பொள்ளாச்சி அபி.!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி (4-Jan-12, 10:46 am)
சேர்த்தது : பொள்ளாச்சி அபி
பார்வை : 372

மேலே