பாசம்

நீ எனை பார்த்த பார்வையில்
உன் ஏக்கம் தெரிந்தது !
அணைத்த இறுக்கத்தில்
உன் தவிப்பு தெரிந்தது!
நீ அழுத அழுகையில்
உன் பாசம் தெரிந்தது !
ஆனால் மகனே !
என் ஏக்கத்தை , தவிப்பை , பாசத்தை
நான் எப்படி உணர்த்துவது !!

எழுதியவர் : (5-Dec-09, 3:54 pm)
Tanglish : paasam
பார்வை : 809

மேலே