அபியின் கவிதை சித்திரம் ---மர்மப் புன்னகை

அருமை அருமை அபி ஒரு கதாசிரியரின்


அழகிய கவிதை ஒரு சிறு கதையின்


கருவை கவிதைக்குள் வைத்து


அழகிய ஓவியம் வரைந்திருக்கிறீர்கள்


ஆரம்பத்தில் இயற்கை வர்ணனை


கவிதை நெடுக உவமைகள் இறுதியில் புன்னகையின் மர்மத்தை விடுவித்து


கண்ணீர் வரவழைத்துவிட்டீர்கள்


உரை நடையிலும் கவிதையிலும்


தேர்ந்த எழுத்து நடை உயர்ந்த உத்தி


பாரதியின் குயில் பாட்டு போன்ற


குறுங் காவியம் உங்களுக்கு சாத்தியம்


எழுத்தின் படைத்தவர் என்ற மகுடம்


உங்களுக்கு சாலப் பொருந்தும்


---கவின் சாரலன்

கவிக் குறிப்பு: பொள்ளாச்சி அபியின் கவிதைக்கு
என் மனதில் பட்ட கருத்து நீங்களும் படியுங்கள்
ஒரு கதையை கவிதையாக்கி தந்திருக்கிறார்
சில வரிகள் கவிதைக்கு அப்பால் சென்று
புதுக் கவிதையில் ஏதாவது செய்யவேண்டும்
என்று விரும்பும் கவி நண்பர்கள் அபியை
படிக்கலாம் பின்பற்றலாம் தேர்ந்த எழுத்தாளர்
கவிஞர் பொங்கலில் புதிது செய்வோம்
புதிதாய் பிறப்போம்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jan-12, 6:30 pm)
பார்வை : 487

மேலே