மயக்கம்.

மயக்கம்.

பெற்றவர் கலாச்சாரம் ஒருவர்
பேச்சிலும் மூச்சிலுமானாலும்,
பச்சையாய்க் கண்பறிக்கிறது
புலம் பெயர் கலாச்சாரம்.
மூடப்பழக்கமோவென மயக்கமாய்
வாடித் தெரிவது எம் கலாச்சாரம்.
தேடி ஆராய்ந்தால் அங்கு
கூடிய நன்மைகள் புரியும்.

உலக மாற்றத்தோடு நவீனமாய்
உருளும் புலம்பெயர் கலாச்சாரம்
உல்லாசமாய் அனைவரையும் தன்வசம்
இழுப்பது ஆச்சரியமில்லை.
இலையாடை அணிந்தவனின்று
இல்லையந்தக் கலாச்சாரத்தில்.
உலகமே மாறுகிறது நம்
வழமைகளும் பல மாறுகிறது.

கலாச்சாரப் பாதிப்பென்பது மனதில்
கலப்பையால் உழுதிடும் நிலைதான்.
ஆழப்போகும் வேரான தமிழ், எம்
மூலமொழி – இன அடையாளம்.
காலம், இட மாற்றத்தோடு ஆகும்
கலாச்சாரப் பாதிப்பால் அழிய வேண்டாம்.
நிலாவெட்டும் காலத்திலும் இளையவர்
சலாம் போடத் தமிழ் வளர்க்கட்டும்.

பா ஆக்கம் வேதா. இலங்காதிலகம்.
ஓகுஸ், டென்மார்க்.
10-2-2007.

எழுதியவர் : திருமதி.வேதா. இலங்காதிலகம (24-Jan-12, 11:31 pm)
பார்வை : 252

மேலே