பிப்ரவரி-14

காதல் என்றால் என்ன?
என்று கேட்டேன் நண்பர்களிடம்
காதலித்து பார் என்றான் ஒருவன்...

அது ஒரு வெங்காயம்
என்றால் அவள்...

காதல்-உருவமில்லாத உயிர்
என்றான் இன்னொருவன்...

யார்யாரெல்லாம் தற்கொலைக்கு முயற்சிக்கிறார்களோ அவர்கலேக்கெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் என்றான்
அவனின் நண்பன்...

வார்த்தைகளால் வர்ணிக்கமுடியாது
என்றால் இன்னொருத்தி...

உள்ளதை உள்ளதுபோல்
தெரிவிப்பது தான்-காதல்
என்றார் திருமணமான அனுபவசாலி...

இவள் தான் என் மனைவி-என்று
தீர்மானித்து நான் காதலிக்கும்
காதலி தான் காதல் என்றேன் நான்...

நீங்கள் எப்படி???

எழுதியவர் : க பரமகுரு (1-Sep-10, 10:24 pm)
சேர்த்தது : Paramaguru
பார்வை : 467

மேலே