VINNULAGAM POGA .....

வானுலகம் பொய் வருவதற்க் கோர் - புது
வாகனம் எனக்கு வேண்டும்
ஆணுலகம் காணா அதிசயத்தை - நான்
அங்கு போய் காண வேண்டும்

பொன்னுலகம் போய் வருவதற்க் கோர் - சிறு
பெண்குதிரை எனக்கு வேண்டும்
மண்ணுலகம் கானா பொக்கிஷத்தை - அங்கே
மனமார நான் காண வேண்டும்

பெண்ணுலகம் போய் விடுவதர்க் கோர்
பேராண்மை எனக்கு வேண்டும்
என்னுலகம் அது தானென்று - அதில்
என்றென்றும் தங்கி விட வேண்டும்

விண்ணுலகம் போய் விலை பேசி - ஒரு
பெண்ணுக்கு வாங்கி தர வேண்டும்
கன்னுலகில் அவள் வாழ்வதற்கு - வலக்
கால் வைத்து எனக்குள் வரவேண்டும்

பூவுலகம் வாழ் அவளோடு - நானோர்
புரட்சியை பண்ணி விட வேண்டும்
புது உலகம் வா என்றழைத்து - பல
புதுமையை காட்டித் தர வேண்டும்

தனி உலகம் தனில் இனி நாங்கள் - புது
தாம்பத்ய இலக்கணத் தைப்படைப்போம்
இனி உலகம் அதை பின் பற்ற - தோதாய்
வித வித மான நிலை சமைப்போம்

எழுதியவர் : PAAVAI-ABBAS (2-Sep-10, 12:45 am)
சேர்த்தது : abbasghani
பார்வை : 462

மேலே