வெற்றுத்தாள்

மை காய்ந்த பழைய பேனா
டிராயரின் அடியில் கிடந்தது
நொடியில் தோன்றிய கவிதை ஒன்றை
மறப்பதற்குள்ளாக எழுத முனைந்து
கிறுக்கிப் பார்த்தும் எழுதவில்லை
குலுக்கிய விசையில் தெறித்த துளிகளில்
ஒளிந்துகொண்டிருக்கிறது என் கவிதை.

எழுதியவர் : (17-Dec-09, 11:50 am)
சேர்த்தது : GJ
பார்வை : 740

மேலே