என்ன இது வாழ்க்கை என்று
எண்ணிக் கொண்டிருந்த
எனக்கு- புது
விடியலாய் வந்து
சேர்ந்தாய் நீ!
உன்னால்...
உன்னால் மட்டுமே
நான் என்னையே
விரும்ப ஆரம்பித்தேன்...
உறக்கத்தின் நடுவில் கூட
உந்தன் பெயரையே
உச்சரிக்கிறேன் நான்!
காலங்கள் போதவில்லை
உன்னை நான்
சிந்திப்பதற்கு...
நான்
சந்தோசமாக இருக்கிறேன்
உன்னைப் பற்றிய
நினைவுகளில் மட்டும்...
எந்தன் நெஞ்சம்
உந்தன் உல்லாச
மாளிகை...
எந்தன் இதயம்
உனக்கான ஆலயம்...
எந்தன் புன்னகை
எனக்கு
நீ கொடுத்த வரம்
உன்னால் தான்
என் வாழ்வில்
வந்தது வசந்தம்
உனக்காகத் தான்
காத்திருக்கிறது
என் வாழ்வும்
விரைவில் வந்துவிடு
என்னை
உன்னிடம் கொடுப்பதற்கு...