[94] மரணத்தை வென்ற மகாத்மா..!

துன்பமின்றித் துயரமின்றி வாழ எண்ணித்
துடிக்கின்ற மானிடமே! இதனைக் கேளாய்!
அன்புசெய்யப் பழகிடுவாய்! ஆகா தோற்கும்
ஆறுதலைக் கொடுப்பதற்கே முயற்சி செய்வாய்!
இன்பமென்ற பகற்போழுதே இருந்து விட்டால்,
இரவென்ற ஒய்விங்குக் கிடைக்கப் போமோ?
அன்பும்,ஒரு 'தப்படி'தான் வாம னன்போல் அளந்துலகை அதுவேல்லும் ஆளும் என்றும்!

முன்பிருந்த துயரெண்ணி மலைத்தி டாமல்
முயன்று,பலர் நன்மைக்கே முடிவில் வென்று
பின்பெழுந்த காந்தியினை எண்ணிப் பாரும்!
பிறர்க்குவரும் நன்மைகளைப் பெரிதாய் எண்ணி
அன்புசெய்த இயேசுவைத்தான் அவரு ணர்ந்தார்!
அதிலுள்ள சுகமறிந்தார், துயர்ம றந்தார்!
தென்புவர மனத்துள்ளே , தேவை குன்றத்
தேவனைப்போல் முயன்றெழுந்தார்! இன்றும் வாழ்வார்!
நிலம்தாங்க வளர்மரங்கள் ஓரு யிர்தான்,
நின்றிடத் தே,அவைகள் பூவும் தேனும்
உலர்ந்தழியும் முன்பளிக்கும் உண்மை தேர்வீர்!
ஒருபயனும் இல்லாத உயிர்கள் இல்லை !
அலந்துழந்து வாழ்வதெலாம் அடுத்தொர்க்கு ஒன்று
ஆற்றுவதற்கு என்றுணர்ந்தார் ! அன்பே செய்தார்!
குலம்,சாதி, மதமென்று குறைத்துப் பேசிக்
குடிமக்கள் பிரிவதனைச் சாடித் தீர்த்தார்!

தன்னிலும்ஓர் இனியனென ஒருவர் கண்டார்!
'தனைப்பிறர்க்காய்க் கொடுத்தவரை'த் தன்னுட் கொண்டார்!
தன்னிலவர் இருப்பதனைத் தினமும் நம்பித்
தவறுகளுக் காய்வருந்தித் திருந்தி, வேண்டி
நன்மைகளே பிறர்க்காற்ற உறுதி பூண்டார்!
நாளுமொரு பிறப்பெடுத்து நடந்து காட்டி
இன்னுயிரும் அவர்போலக் கொடுத்தெ ழுந்தார் !
இன்றுமவர் மக்கள்மனத் திருந்து வாழ்வார்!
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (22-Feb-12, 1:19 pm)
பார்வை : 176

மேலே