![]() !!! கேள்விகளால் சில கேள்விகள் !!!உங்கள் கருத்துக்களுக்கு நன்றி அய்யா! ஆனால் நமக்கு பகுத்தறிவு மிகவும் அவசியம் அய்யா இதை உங்களால் மறுக்க முடியுமா...???
|

நீங்கள் விரித்துரைத்திருப்பது மதத்தின்
மற்றதின் பெயராலும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமூக அவலங்கள் .
ஏழ்மை வறுமை இல்லாமை .
அரசாங்கங்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றன ? அடுத்த தேர்தலில் தீர்வு காணலாம்.... இப்படி
60 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டன
அடுத்து நீங்கள் விமர்சித்திருப்பது
ஆலயம் இறைவன் இறை நூல்கள்
அது உங்கள் கருத்து. நான் அதை
மாற்றுவதற்கில்லை
மனித மூளையின் ஆறாம்நிலை
அறிவு அல்லது பகுத்தறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது அதற்க்கு அப்பால் மனிதனை எடுத்துச் செல்கிறது
ஆன்மிகம் என்கிறது தத்துவ நூல்கள்
நீங்களும் சிந்தனை கங்கையில்
மூழ்கினால் சில விளக்கங்கள் கிடைக்கலாம் அதுதான் நான் சொல்ல
வந்தது பகுத்தறிவு பற்றி பேசுகிறீர்கள்
ஆதலினால் சிந்தனையின் உயரிய
நிலையிலிருந்து பார்பீர்களானால்
பார்வையின் கோணமும் வித்தியாசப்படும் பார்க்கின்ற பொருளின் பிரத்தியச்சமும் சற்று
தெளிவாகும்
தீக்குச்சி ஒளியில் இருள் விலகும் என்று
சொல்கிறீர்கள். மறையின் கூற்றும்
அதுவே "தமசோ வா ஜோதிர்கமய "
--இருளில் இருந்து ஒளியை நோக்கி
ஓம் தத் சத் ஓம் என்பதே தத்துவம்
ஓம் என்பதே சத்தியம்
ஒளிமிகு நிலாவையும் சூரியனையும்
பெயரில் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்
இருளை விளக்குவது அவ்வளவு
உங்களுக்கு அவ்வளவு கடினமா ?
உங்களுக்காக எனது ஒரு கவிதை
இறைவன் ஆலயத்தில்
வாழ்கிறான்
இல்லாதவன் வறுமையில்
வாழ்கிறான்
அரசியல்வாதி சுரண்டலில்
வாழ்கிறான்
கவிஞன் சொல்லில்
வாழ்கிறான்
சொல்லியே
முடிக்கிறான்
---அன்புடன்,கவின் சாரலன்
பதில் அளி

கோவில்கள், சிலைகள், இறைவனை பற்றிய நூல்கள், மதங்கள் இவைகளுக்கும் கடவளுக்கும் சம்மந்தம் இல்லை என்கிறீர்களா? அப்படி என்றால உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன், இவைகளை பற்றி எல்லாம் நான் சொல்வதற்கு காரணம் இருக்கிறது அது என்னவென்றால் கடவளின் பெயரில்தான் இங்கே அதிகமான மூடநம்பிக்கைகள் அவதரித்து இருக்கின்றன அதனால்தான் சில எடுத்துக்காட்டுக்களை நான் கூறவேண்டியதாயிற்று, இங்கே ஒவ்வொரு மனிதனும் கடவள் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் கோவில் கோவிலாய் கடவளைத் தேடி அலைவதையும், பூஜைகள் புனஷ்காரங்கள் செய்வதையும் நாம் கண்டுகொண்டுதானே இருக்கிறோம் அதற்காகத்தான் சில எடுத்துக்காட்டுகள்.
மனிதனுக்கு ஆறு அறிவு மட்டும்தான் உண்டு என்று திட்டவட்டமாக தெளிவாக எப்படி நீங்கள் முடிவு செய்கிறீர்கள்? ஏன் பதினைந்து இருபது அறிவு இருக்காதா? அல்லது நான்கு அறிவு ஐந்து அறிவு இருக்காதா? இப்படி எல்லாம் கேட்டுகொண்டே போகலாம் என்னிடம் கேட்பதற்கு நிறைய இருக்கிறது நான் நிறைய கேட்டால் நமது கருத்து பரிமாற்றம் ஆரோக்கியம் இல்லாமல் போய்விட்டால் நன்றாக இருக்காது அதனால் நான் கேட்க முற்படவில்லை,
பகுத்தறிவையும் தாண்டி ஆத்மா அறிவு ஒன்று இருக்கிறது என்று சொல்கிறீர்கள் நான் ஏற்றுகொள்கிறேன் ஆனால் அந்த ஆத்மா அறிவையும் கண்டு கொள்ள பகுத்தறிவால் மட்டுமே முடியும் என்பதுதான் என்னுடைய தெளிவான கருத்து. பகுத்தறிவுதான் அறிவுகளிலேயே மிகப்பெரிய அறிவு, நாம் ஏழாவது அறிவுக்கு செல்லவேண்டுமென்றால் பகுத்தறிவின் துணையின்றி செல்ல முடியாது என்பதுதான் நான் கூறுவது. பகுத்தறிவின் துணையின்றி நாம் இங்கு எதையுமே செய்ய முடியாது உயர்திரு கவின் சாரலன் அவர்களே.
நீங்கள் எனக்கு உபதேசித்த மந்திரங்கள் எனது தாய் மொழியில் உருவாக்கப்பட்டதா? அல்லது சமஸ்து கிருஷ்தத்தில் இருந்து தழுவியதா? இந்த கட்டுரையை படிப்பவர்கள் இந்த மந்திரங்களை உச்சரித்து பயன் அடைந்தாள் நமது கருத்து பரிமாற்றளுக்கு ஒரு புண்ணியம் உண்டு, யான் பெற்ற இன்பம் இவ்வையகமும் பெறட்டும்.
எனக்காக நீங்கள் சொன்ன கவிதையில் கடவள் கோவிலில் இருக்கிறான் என்று சொல்லி இருப்பது தொடக்கத்தில் இருந்து தொடர வைக்கிறது, இதை நான் ஆரம்பத்தில் இருந்தே ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை, கடவள் தூய்மையான அன்புள்ளம் கொண்ட ஆத்மாக்களில்தான் இன்னும் வாழ்ந்துகொண்டு இருக்கிறான் கோவில்களில் அல்ல இதைதான் திருமதி அமுதா அவர்களின் கருத்தும் எனது கருத்தும்.
நன்றி திரு கவின்சாரலன் அவர்களே தாங்கள் எனக்கு சொன்ன கருத்துக்களில் நிறைய தெரிந்து கொண்டேன்.
பதில் அளி

கடவுள் எங்கே இருக்கிறார் என்று அழகாக விளக்கி விட்டீர்கள் . நீங்கள் கேட்ட கேள்வி அனைத்து பகுத்தரிவாலர்கலையும் சிந்திக்க வைக்கும் .
பதில் அளி

நன்றி திருமதி அமுதா அவர்களே... உங்களோட இறைவன் எங்கே இருக்கிறான் என்ற கவிதையால் வந்ததுதான் இந்த ஆரோக்கியமான கருத்து பரிமாற்றம்.
பதில் அளி
