தோகைகள் வரையும் எழில் ஓலை

விழியில் மைஎழுதுவதற்கு கோல்
அனுமதிக்கப்பட்டது ஆனால் ஏட்டில்
எழுதும் காலத்திலும் எழுதுகோல்
அவளுக்கு அனுமதிக்கப் படவில்லை
அவள் அழகு பாராட்டப்பட்ட அளவிற்கு
அவள் அறிவு அங்கீகரிக்கப் படவில்லை
வளர்க்கப் படவில்லை இன்றும் சில
கட்டுப் பாடுகளுக்கு இடையில்தான்
பெண்கவிஞர்கள் எழுதுகிறார்கள்
கணினி இணையதள வசதியினால்
நிறைய கவிஞையினர் எழுதுவது
ஓர் ஆரோக்கியமான வளர்ச்சி ஒரு
பெண் உணர்வுகளை நளினமாக
கவிதையில் வெளியிடும் அழகு
ஆண் கவிஞர்களின் கவிதையிலிருந்து
நிச்சயமாக வித்தியாசப் பட்டு நிற்கிறது
பெண்மனதின் உணர்வுகளின்
ராகங்களும் தாளங்களும் ஒரு
வித்தியாசமான நீரோடை என்னதான்
நானோ நீங்களோ ஏன் பாரதியோகூட
அந்த மெல்லிய உணர்வுகளை
கைவசப்படுத்த முடியாது. அது
தாயுள்ளத்திற்கு இறைவன் தந்த
வரம்.சென்ற காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு நமது காலங்களில் நமக்குக்
கிடைத்திருக்கிறது அந்த மயில்
தோகைகள் வரையும் எழில் ஓலையை
வாழ்த்தி வரவேற்போம்
சரிதானே கவிப் பிரிய பிரியாராம்

---அன்புடன்,கவின் சாரலன்

கவிக் குறிப்பு : ப்ரியா ராம் எழுத்து.கம நண்பர்களுக்கு
விடுத்த வேண்டுகோளுக்கு குறிப்பாக பெண்கவிஞர்களை பற்றி சொன்ன கருத்தின்
நியாயத்திற்காக எழுதிய கருத்து
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-12, 8:36 pm)
பார்வை : 230

மேலே