உள்ளம் எனும் ஊதுகுழல் =Dr. V .K .KANNIAPPANIN KATTURAIKKU ALITHTHA KARUTHTHU

வண்ணச் சிறகு விரித்து வானில் பறந்து


வரும் வண்ணத்துப் பூச்சிகள் எத்தனை


வண்ண மலர்களில் அமர்பவை எத்தனை அமர்ந்து தேன் அருந்துபவை


எத்தனை வண்ண வண்ண மலர்கள்


எத்தனை இந்த இலக்கியத் தோட்டத்தில்


என்று ஓர் ஆய்வு செய்யுங்களேன்


டாக்டர் நீரொழிய பால் பருகும் அன்னம்


போல் சமன் செய்து சீர்தூக்கும் கோல்


போல்.


மின்னுவதெல்லாம் பொன்னும்


இல்லை பொன்னெல்லாம் பித்தளை


இன்றி அணிகலன் ஆவதும் இல்லை


ஆயினும் தங்கத்தின் மாற்று எவ்வளவு


பித்த்தளையின் ஊற்று எவ்வளவு


என்பதைப் பொறுத்துத் தான் நகையின்


தரம் நிர்ணயிக்கப் படும் அதன் விலை


குறிக்கப் படும் அது போலத்தான்


கவிதையும். நற்கவிதையும் பொன்னகையும் மாற்று


உயர்ந்திருந்தால் விலைபோகும்


குறைந்து போனால் இலக்கிய வீதியில்


அல்லது கடைவீதியில் தோற்று நிற்கும்


புல்லாங்குழல் மூங்கிலினால் ஆனது


ஊதுகிறவனின் திறமையால் கீதம்


ஆகிறது மனதை அள்ளிச் செல்கிறது


உள்ளத்தை ஊது குழல் ஆக்கி உணர்வுகளை கற்பனைத் திறன் கொண்டு இசை பாடுவது கவிதை


எண்ணங்கள் மலர்ந்து சிரிக்கும்


வண்ணத் தோட்டம் கவிதை வார்த்தைகள் நடை பயிலும் யார்


வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற


ஒற்றையடிப் பாதை இல்லை கவிதை


செடி வளர்ப்போம் கொடி வளர்ப்போம் பந்தல் அமைப்போம்


புதிய வண்ண மலர் தோட்டம்


செய்குவோம்


---அன்புடன்,கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Mar-12, 4:08 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 319

சிறந்த கட்டுரைகள்

மேலே