எழுத்துலக நண்பர்களே…!! என் எழுத்து சொந்தங்களே..!!

வந்தேன் நான் உங்களோடு வடம்பிடிக்க,
வருவேன் நான் நம் தமிழ்த்தேர் உலா முடியும் வரை.
ஏதோ சிலநல்ல வார்த்தைகளை என்எழுத்தில் தெரிவிக்கின்றேன்.
கண்ணில் பட்டவைகள், கருத்தைக் கவர்ந்தவைகள்
மனதை சுட்டவைகள், உள்ளம் தொட்டவைகளென
என் எழுத்துகள் உங்கள் முன் உலாவரும்.
இலக்கணம் கற்றதும் இல்லை,
இலக்கியத்தில் கரைகண்டதும் இல்லை…
தமிழ் ஆர்வத்தில் எழுத்தில் எழுத வந்துவிட்டேன்,
தமிழ் தாகத்தில் கவிதைகள் பருக வந்துவிட்டேன்.
பெரியோரே! தமிழ் சான்றோரே!
என் தமிழை ஏற்று குறைகளை எடுத்துக் காட்டுங்கள்
மாற்றிடுவேன் நிறைகளாக... வளர்ந்திடுவேன் உங்களாலே…
இந்த எழுத்து சூறாவளி இனிமேல்தான்
மையம்கொள்ளப்போகிறது.
பிடித்திருந்தால் சிலவரிகள் எழுதுங்கள்
பிடிக்கவில்லை என்றால் பலவரிகள் எழுதுங்கள்.
என் இனிய நண்பர்களே! உங்கள் வரிகள்தான்
என்னை மென்மேலும் உயர்த்தும் ஏணிகள்.
இங்கே சிலர் மதிப்பெண்களுக்காக மல்லுக்கட்டுகின்றனர்.
மதிப்பெண்கள் என்பது ஒரு சின்ன அளவீடே
என்பதை ஏனோ அறிய மருக்கின்றனர்.
அறுபதாயிரம்தொட்ட நம் எழுத்தில்
புதியவர்கள் எப்படி நல்லசில கவிதைகளை
அடையாலம் காண்பது? முதலில் பரிசுபெற்ற கவிதைகள், அடுத்து மதிப்பெண்பெற்ற கவிதைகள், பிறகு நல்ல தலைப்பிட்ட எழுத்துகள், அப்புறம் நம்மை விமர்சிக்கும் வரிகளால் மனம் கவர்ந்தவர்களின் கவிதைகள். இதுதானே பழக்கமாகிப்போகும்.
வேறு நல்லவழி இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே… எபபடி ஒருவருக்கு நிரைய மதிப்பெண்கள் கிடைக்கிறது?
எழுத்தில் உள்ள நண்பர்களால் மட்டுமா? இல்லவேயில்லை…
எழுத்துவட்டத்தைவிட அவர்களின் வெளிவட்டம்
மிகப்பெரிதாக இருக்கும். ஒருவர் பள்ளியின் தாளாளர் அவர்க்கு, ஆசிரியர்கள், மாணவர்களின் வட்டம் ஏறாலம். மற்றவர் பலரும் அறிந்த மருத்துவர், சிலர் எழுத்தில் பழம் தின்று கொட்டைபோட்டவர்கள், ஒரு சிலர் எழுதிஎழுதிக் குவித்தவர்கள்,
மற்றும் சிலர் கல்லூரி மாணவர்கள். நட்புவட்டம் பற்றி சொல்ல வேண்டுமா என்ன?... இவர்களன்றியும் மற்றவர்கள் மதிப்பெண்கள்
பெருவதென்பது அறிதுதானே…
நம் வட்டம் எழுத்து சிறுவட்டம்தானே… நாம் நமது நண்பர்களுக்கும், நமது உறவினர்களுக்கும் எழுத்தையும் நமது எழுத்தையும் அறிமுகப்படுத்துவோம். எழுத்து நம்மால் விரியட்டும். நாம் எழுத்தால் வளர்வோம்.
நட்பே இங்கு மிகவும் மதிக்கப்படுகிறது. நட்புக்கவிதைகளே எழுத்தில் மிகவிரும்பி படிக்கப்படுகிறது.
நாம் நட்பைப் போற்றுவோம். நம்மால் தமிழும் தமிழால் நாமும் உயர்வோம்.
இன்னும் சிலருக்கு தமிழின்நிலை குறித்து பயமிருக்கு.
இருக்கட்டும் இருக்கட்டும் மடியில் கனம் இருக்கிறதே..
வழியில் பயம் இருக்கவேண்டும் இருக்கட்டும்…
வள்ளுவபெருந்தகையும், கவிக்கம்பரும் வரைந்த ஓவியத்தமிழ், சிகரம் தொட்ட நம்தமிழ், கணினிக்கு மிகஉகந்த மொழி தமிழ்.
இன்னும் இங்கே தூயதமிழ் மனம் இருக்கத்தான் செய்கிறது.
இருபத்துநான்கு மணிநேர சேவைகளை அழைத்தால் அழகான தமிழ்க்குரல் நம்மிடம் உரையாடுகின்றது. நம் குறைகளை கேட்டுதவுகின்றது. இதற்காகவாவது பெருநிருவனங்களின் சேவைகளை பாராட்டத்தான் வேண்டும்.
தமிழை நாம் வளர்ப்போம், தமிழால் நாம் வளர்வோம்.
நம் பிள்ளைகளுக்கு நல்ல தமிழைக் கொடுப்போம்.
இதுபோல் நண்பர்களே உங்கள் மனதில் தோன்றும்
வரிகளை பொதுவில் எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் என் இனிய நண்பர்களே! மீண்டும் சந்திப்போம்.
எல்லோரும் எல்லாமும் பெற்று இனிதே வாழ்வோம்…

எழுதியவர் : எழுத்து சூறாவளி (10-Mar-12, 9:25 pm)
பார்வை : 288

சிறந்த கட்டுரைகள்

மேலே