எழுத வேண்டும் என்ற எனது ஆர்வம் பகுதி 3

நாம் அனைவரும் எழுதும் புதுக்கவிதைகளை புலவர்கள் சபையில் அரங்கேற்ற வேண்டியது இல்லை. புத்தகமாக வெளியிட வேண்டும் என்றால் அதற்கு ஒரு தமிழரிஞரிடம் அணிந்துரை வாங்கி அங்கீகாரம் பெற்றால் நல்லது.

'எழுத்து' தளத்தில் நான் எழுதி வெளியான சுமார் 162 கவிதைகளை மூன்று தொகுதிகளாக தயார் செய்து, பிரபல தமிழறிஞரிடம் கொடுத்து இருக்கிறேன். அவர் சரிபார்த்து ஒப்புதல் வாங்கிய பின் புத்தகமாக வெளியிட ஏற்பாடு செய்து வருகிறேன்.

நான் இரண்டு மாதங்களுக்கு முன் கோயம்புத்தூர் சென்றிருந்த பொழுது திரு.ஹரிஹர நாராயணன் அவர்களை அவர் இல்லத்தில் சென்று சந்தித்து வந்தது மிக மகிழ்வாக இருந்தது. அவர் மனைவியும், குழந்தைகளும் இன்முகத்துடன் உபசரித்தார்கள்.

அங்கிருந்து ஈரோடு சென்று, பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவப் பேராசிரியர் & டீன்:டாக்டர் A.செலஸ்டின் ராஜ் மனோகர் அவர்களைச் சந்தித்து வந்தேன். அவர் ஆங்கிலக் கவிதைகள் சுமார் 2750 க்கு மேல் எழுதி ஆங்கிலத் தளத்தில் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை 'Sonnet' என்னும் பதினான்கு வரிப் பாடல்களாகும். ஷேக்ஸ்பியர் 154 Sonnet மட்டுமே எழுதியுள்ளார்.

ஷேக்ஸ்பியரின் 130 வது பதினான்கு வரிப் பாடலை (My mistress' eyes are nothing like the sun) 'என் காதற் தலைவியின் கண்கள் கதிரவனைப் போலில்லை' என்ற தலைப்பில் நான் தமிழாக்கம் செய்து 'கீற்று' தளத்தில் வெளியிட்டு இருக்கிறேன்.

நான் சென்னை செல்லும் போது, திருமதி.அமுதா அம்மு அவரின் எழுத்து ஆர்வமும், மருத்துவ நண்பரின் மனைவி, கல்வியாளர் என்பதாலும் திருமதி.அம்மு அவர்களையும், ஓட்டேரி செல்வகுமார் என்பவரையும் சந்திக்க ஆவலாய் இருக்கிறேன். ஓட்டேரி செல்வகுமார் பற்றி தனியாகத் தெரிவிக்கிறேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (13-Mar-12, 6:40 am)
பார்வை : 217

மேலே