எழுத வேண்டும் என்ற எனது ஆர்வம் (பகுதி 4)

பாரதியாரின் கவிதைகளோடு நம் கவிதைகளை ஒப்பீடு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஒருமுறை ஒரு விழாவில் ஒரு மாணவர் வாசித்த கவிதையை யாரும் கண்டு கொள்ளவில்லையாம். அடுத்து கவிஞர் கண்ணதாசன் வாசித்த கவிதைக்கு பலத்த கைதட்டலாம். முடிவில் கண்ணதாசன் சொன்னாராம், 'முன்பு அந்த மாணவர் வாசித்த கவிதைதான் என்னுடையது. நான் வாசித்தது அந்த மாணவருடையது. நல்ல கவிதைக்கு ஆதரவு தாருங்கள். ஆளைப் பார்த்து மதிப்பிடாதீர்கள்' என்றாராம்.

எழுத்து தளம் 2.12.2009 லிருந்து செயல்படுவதாகத் தெரிகிறது. 'காதலன்' தொடங்கி 'ரஜனி' வரை (06.03.2012) 6260 பேர்கள் இத்தளத்தில் கவிஞர்கள்/ எழுத்தாளர்களாகப் பதிவு செய்து இருக்கிறார்கள். நம் கவிதைக்கு பார்வையாளர்களும், மதிப்பெண் கொடுப்பவர்களும் இவர்களில் ஒருவராகத்தான் இருக்க வேண்டும்.

நமக்குத் தெரிந்த, நம்மை அறிந்த நண்பர்களும், உறவினர்களாகவும் இருக்கலாம். எழுத்து தளத்தில் எழுதும், அறிமுகமான நண்பர்களும் இருக்கலாம். நான் எழுதும் சில கவிதைகளை? என் மனைவி, மகன், மருமகளை வாசிக்கச் சொல்வேன். அவர்களை மதிப்பெண் அளிக்க விடுவதில்லை.

சாமி என்ற படத்தில் காவல்துறை உதவி கமிஷனராக வரும் விக்ரம், வில்லன் பெருமாள் பிச்சையிடம் வந்து ஒரு சில இடங்களில் உள்ள மதுக் கடைகளை மாற்றும்படி அறிவுறுத்துவார். அவரும் ஒப்புக் கொள்வார். ஆனால் உடன் இருப்பவர்கள் 'என்ன அண்ணாச்சி, அவன்தான் சொல்றான்னா, நீங்களும் தலையாட்டுறீங்க' என்பார்கள்.

அதற்கு அவர் 'அவன் சொல்றதும் சரியாத்தான் இருக்கு, அன்பாத்தானலே சொல்லுதான், வியாபாரமும் டல்லாத்தானே இருக்கு, கடையைத்தான் மாத்திப் பார்ப்போமே' என்று வில்லனே உடன்பாடாக ஏற்றுக் கொள்வார். அதுபோல நாமும் விமர்சனங்களை உடன்பாடாக ஏற்றுக் கொள்வதில் தவறில்லை. நாமும்தான் நம் நடையை மாற்றிப் பார்ப்போமே!

16.02.2012 ல் ஹரிஹர நாராயணன் எழுதிய 'ஹல்வா' கவிதைக்கு நாகமணி எழுதிய விமர்சனம் மேலும் சுமார் ஐம்பது கவிதைகளை உருவாக்கியது அருமை. ஹரி, நாகமணிக்கு மிக்க நன்றியும் தெரிவித்திருக்கிறார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (14-Mar-12, 10:12 am)
பார்வை : 310

சிறந்த கட்டுரைகள்

மேலே