இனி வரும் காலம்!

(இதை ஒரு கவிதை என்று சொல்வதா, கதை என்பதா, கட்டுரை என்பதா என்று எனக்குப் புரியவில்லை. கதைப்பகுதியில் சேர்த்திருக்கிறேன். இது எந்த வகை என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள். பிழைகளைத் திருத்திக் கொள்கிறேன்)

நெடுநாள் காதலி "சீ,போ" என்றாள்,
மதுவைச் சரித்தால் மனமயக்கம் போகுமென்றான்
நண்பன்.
பர்சைப் பார்த்தேன், அதுவோ காலி.
அப்பாவிடம் கேட்டேன் செருப்பாலடிப்பேன்
என்றார்.
அம்மாவிடம் கேட்டால் முகாரி
பாடினாள்.
தங்கையின் உண்டியலை உடைத்ததில்
கிடைத்தது இருநூறு.
பெட்ரோலுக்குமாச்சு என்று டாஸ்மாக்குக்குப் போனால்
கடையிலோ பூட்டு.
கடைக்காரனைப் போனில் விளித்தால்
காந்தி ஜெயந்தி என்றான்.
என் ஜெயந்தி போனாள் என்றேன்.
இரக்கம் கொண்டான்.
அரைப்புட்டிக்கு நூறு என்றான்.
புட்டியைக் கோப்பையில் சரித்து கோப்பையை வாயில் சரித்து
அப்படியே வண்டியில் சரிந்தால் அதுவும் வேகமாய் ஓடி
போதையில் சரிந்தது, எதிரில் வந்த கிழவன் மேல்.
தலைக்கேறிய போதை கீழே இறங்க,
எதிரில் வந்தது போலீஸ் வண்டி.
ஏறிக்கொள் என்றார் போலீஸ் மாமா.
லாக்கப்பில் படுத்தேன் ஓரிரவு,
தூக்கமோ இல்லை
கொசுக்களின் தொல்லை.
காலை வந்தது,
அப்பா வந்தார்,
பொறுக்கி நாயே என்றார்,
வீட்டுக்கிழுத்துப் போனார்.
வழியில் பைக்கில் ஒரு காதல் ஜோடி.
மனதுக்குள் சிரித்தேன்.
"மவனே, சீக்கிரமே ஒனக்கும் என் நெலம தான்".

எழுதியவர் : (25-Mar-12, 12:54 pm)
பார்வை : 542

மேலே