மந்தையே காலியாகிவிட்டது
அந்த நகரத்திலுள்ள
மந்தை கூடியது
வெள்ளையும் சொள்ளையுமாக
எல்லோரும் வந்துவிட்டார்கள்
அவர்களில் ஒருவர்
உத்தரவிட்டார்....
ஜல்லிக்கட்டுக்கு
போகவேண்டியவர்களுக்கு
அனுமதியில்லை
முட்டுதல் மோதுதல்
இங்கே வேண்டாம்
இப்போதே வெளிநடப்பு செய்யுங்கள்
கைபேசி வைத்துக்கொள்ள
அனுமதியில்லை
பலானபடம் பார்த்ததாக
புகார் வரலாம்.
.....................................
..........................................
...........................................
மந்தையே காலியாகிவிட்டது.