என்னோடு வா கனவே !

ஐயா! நம்ம பிள்ளை
சிங்கத்தோடு போராடி
சண்டையிட்டு போர்களத்தில்
வாள் வீசி விளாசி விழுப்புண்
பெற்றார்
என்றதற்கு ...

வீரர்கள் கூறியதைக்
கேட்ட மன்னர்

மரத்தின் வேர் தடுக்கி விழுந்து
விட்டார் என்று நினைத்து
எங்களை எல்லாம்
காட்டுக்குள் அனுப்பி விட்டாரே!

மன்னனுக்கு என்னாச்சு?
கொஞ்ச நாளா காது கேட்கவில்லையாம் ..!

நாங்கள் சொன்னதற்கு ஆமாம் என்றாரே!

தியானம் செய்யும் போது
சரியாகக் காதில் வாங்காமல்
கண்களையும் திறக்காமல்
தலையை மட்டும் ஆட்டி வைத்தார்
அவ்வளவுதான் ...!

ஐயையோ ! தலையசைததற்காக
நாடே ரண காலமாயிடுச்சே என்ன செய்வது...?

ம்ம் இழுத்து மூட வேண்டியதுதான் ...

எதைச் சொல்கின்றாய் ?

என் மளிகைக் கடையை ...!

ஏன்?என்னாச்சு?

அடேய் ! பகல்லயே கனவா?
நல்லா குளி...

அட யாரோ..என் மேல் நீரை ஊற்றுகிரர்களே...!

ஏன் சொல்ல மாட்ட...எழுந்திரிடா? எருமை

...பகல்லயே கனவா! நீ எப்போ வேலைக்குப் போய் எனக்கு சம்பாரிச்சு போடப் போற?உருப்ட மாதிரித்தான் ....

ஓ! அந்த மன்னர் எங்கே?

வானத்துல தேடிப் பாரு இருப்பாரு...

ஒ !இதெல்லாம் கனவா!
ம்ம் ம்ம்

சாரிப்பா ! என்ன மனிசுடுங்க...

போடா போ சீக்கிரம் கிளம்பு ! வேலைய தேடு...

எழுதியவர் : செயா ரெத்தினம் (7-May-12, 5:08 pm)
பார்வை : 223

மேலே