மரணம்

மனம் வீசும் மலராய் பிறந்து ,
மணம் வீசும் மலர்களுடன் செல்கிறோம் .

தொப்புள் கொடியில் மலர்ந்து ,
மண்ணின் அடியில் புதைகிறோம் .

ஏ மனிதனே .........!!!
மூச்சு உள்ளவரை தான்
ஜாதி மதம் .

மூச்சு நின்றவுடன் ,
அனைவரும் சவம் .

எறும்பும் புழுவும்
நமக்கு
உயிர் உள்ளவரை ,
துரும்பு .

உயிர்
போனவுடன் ,அவைகளுக்கு
நம் உடல்
கட்டி கரும்பு

காதலுக்கு ,
கருப்பு வெள்ளை
நிறம் கிடையாது
என்பர்

ஆனால்,
மரணத்திற்கு மட்டும் தான்
நிறம் கிடையாது

ஆம்
கருத்தாய் உள்ளவனும் இறக்கிறான் ,
கருப்பாய் உள்ளவனும் இறக்கிறான் .

வெறுத்தவனும் இறக்கிறான்
வெள்ளைக்காரனும் இறக்கிறான் .

அரசனும் ஆண்டியாவன்
எப்போது ,
உண்மையில் மரணம்
நிகழ்ந்தபோது .....

ஆம்
காரில் செல்பவனுக்கு,
கரிசல் மண்ணும் ,
பழையசோறு உண்டவனுக்கு
பாறை மண்

என்ற
பேதம் கிடையாது
-மரணத்தில்

இறுதியில்
மரணம் ஒன்றே மாசற்றது ,
மரணம்
ஒன்றே சமத்துவத்தை காப்பது

ஆனால் மனிதனே...!!!

நீ மரணத்தை தேடி செல்லாதே
மரணம்
உன்னை தேடி வரும்வரை

எழுதியவர் : Validasan (11-May-12, 1:39 pm)
பார்வை : 412

மேலே