எங்களின் போட்ராட்டம் உங்கள் நிகழ்ச்சிகளின் கருப்பொருலு௮க்கல்ல

யார் யாரோ எங்களை பற்றி
மேடை பேச்சுக்காய்
அரசியல் சாணக்கியத்துக்காய்

தொலை காட்சி போட்டிகளிலே எங்களை பற்றி
கவிதையாய் நடனமாய்
அடுக்கு மொழி பேச்சாய்
நடுவர்களின் தீர்ப்பில் அவர்களுக்கு முதலிடம்

எம் இனம் எம் தேசத்தில் சிறகுகள் வெட்டிய பறவையாய்
எதிரியின் விழயாட்டு பொருளாய்

எங்களுக்காக உதவ வேண்டுமா
உரக்க குரல் கொடுங்கள்
உலகமே திரும்பட்டும்
நீங்கள் ஒத்திகை பார்க்கும் தருணம் போதும்
யாவரும் ஒன்றாகி தமிழீழத்தாயை மீட்க


எங்கள் உறவுகள் ரத்தம் சிந்தியது
நீங்கள் நிகழ்ச்சி பொருளாய் எங்களின் சம்பவங்களை எடுத்து நீங்கள் பரிசுகள் வாங்க அல்ல
உங்கள் உணர்வுகளும் எம்முடன் நாளை சேரும் என்று எண்ணியே
எங்களின் தேசத்தை மீட்க

எங்களின் உறவுகள் எத்தனை நாள் உண்ணாது இருந்தார்கள் தெரியுமா?
உலக சரித்திரத்தில் ஒரு நேர உண்ணாவிரதத்தை
உங்களை பார்த்து தான் உலகத்துக்கே தெரியும்



கேளிக்கைக்கு நாங்கள் பொருளல்ல
தமிழா தயவு செய்து தன்மானம் காக்க ஒன்றுசேர்
மாற்று நண்பன் மனசாட்சியுடன் நடக்கிறான்
நீ முட்டாள்தனமாக நடக்கிராயே


நிகழ்ழிகள் செய்தது போதும்
நின் நாடு அதிர்ந்திட பொங்கிடுவோம்


கிருஷ்ணா

எழுதியவர் : கிருஷ்ணா (11-May-12, 1:59 pm)
பார்வை : 444

மேலே