குடிபழக்கதின் உச்சமும் அதன் விளைவுகளும் (பகுதி -2)

இந்தியாவில் மரணத்தை விளைவிக்கும் முக்கிய காரணங்களில் குடிப்பழக்கமும் ஒன்று.

மனநல மையங்களில் சேர்க்கப்படும் குடி தொடர்பான ப்ரிச்சனைகளால் பாதிக்கப்படும் இளைஞர்கள் / மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போவதாக புள்ளி விவரங்கள் சொல்கிறது.


குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் அதற்கு சொல்லும் காரணங்களை காண்போம்.

1) வேலை இல்லாதது
2) காதல் தோல்வி
3) குடிப்பழக்கமும் ஒரு வித நாகரீகம்

இப்படி ஏற்க முடியாத சில காரணங்களை இவர்கள் சொல்வதன் காரணம் இவர்கள் முழுவதுமாக அதற்கு அடிமையாகி விட்டது தான். தன்னை நியாயப் படுத்தி அடுத்தவர் மத்தியில் தன் மீது ஒரு பரிதாபத்தை ஏற்படுத்திக் கொண்டு தொடர்ந்து குடிக்க வேண்டும் என்பதே இவர்களின் நோக்கம்.

இவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். இவை யாவும் அந்த நேரத்திற்கு மட்டுமே இன்பமளிக்கும். குடிப்பழக்கத்தினால் ஒரு போதும் எந்த பிரச்சனைக்கும் நிரந்தர தீர்வு காண முடியாது என்பை உணர்த்த வேண்டும்.

குடிப்பழக்கத்தினால் இவர்களின் படிப்பு தடை படுகிறது அறிவை இவர்கள் மெல்ல மெல்ல இழக்க தொடங்குகிறார்கள்.

உடல் பலமும், அறிவும், கல்வியும் இல்லாத இந்தியாவை நினைத்து பாருங்கள் தோழர்காள். நீங்கள் நம் நாட்டின் தூண்கள். ஆரோக்கியமான மனம் மற்றும் உடல் பலம் கொண்ட இளைய சமுதாயம் நம் தான் நாட்டை காக்க முடியும்.

ஆகவே தோழர்களே ஆல்கஹாலினால் பாத்திக்கப்பட்டு அதற்கு அடிமையானவர்களை முடிந்த வரையில் திருத்தி நல் வழி நடத்துங்கள். நல் வாழ்க்கை அவர்களும் வாழ வழி வகுங்கள்.


குடிப்பழக்கத்தை பற்றிய மக்களின் தவறான கருத்துகள்:-

1) பீர் மற்றும் திராட்சை மது உடலுக்கு நல்லது
2) சிறிதளவு ஆல்கஹால் உடலுக்கு நல்லது
3) ஆல்கஹால் பாலியல் உறவை மேலும் இன்பமாக்கும்.

4) மன சோர்விலிருந்து விடுபட முடியும்
5) இரவில் குடித்தால் நல்ல உறக்கம் வரும்.
6) மன திடம் / தைரியம் ஏற்படும்
7) அதிகமாக உழைப்பவர்கள் மது மேலும் உழைக்க சக்தி கொடுக்கும் என்று நினைத்தால்

8) பசி உண்டாகும்
9) வேதனை தரும் விஷயங்களை மறக்க மது உதவியாக இருக்கும்.

10) உடற் களைப்பை போக்கும்.

தோழர்களே மேற் சொன்ன அத்தனை கருத்தும் தவறானதாகும். குடிப்பழக்கம் ஒரு போதும் உடலுக்கும் மனதிற்கும் நன்பையை அளிக்காது. ஆல்கஹால் என்த அளவிற்கு சீக்கிரம் உங்களுக்கு போதையும் சுகமும் தருகிறதோ, அதை விட வேகமாக உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை அழிக்க முடியும் வீரியம் கொண்டது.

தயவு செய்து இந்த கருத்துகளை சரி என நம்பி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விடாதீர்கள். சாதிக்க வேண்டிய வயதில் தேவையற்ற பழக்கங்களால் உயிரை விட்டு விடாதீர்கள்.

விதியால் இறந்தால் அந்த மரணத்திற்கு மதிப்பாவது இருக்கும். இப்படி கேட்ட பழக்க வழக்கங்களால் நோயுற்று இறக்க நேரிட்டால், நினைத்து பாருங்கள் ஒரு தெரு நாயின் மரணத்திற்கு கிடைக்கும் மதிப்பு கூட குடிகாரர்களுக்கு கிடைக்காது.

எனவே தோழர்களே இதுவரை குடிபழக்கம் இருந்திருந்தால் கூட கொஞ்சம் கொஞ்சமாக அதனை தவிர்க்க பாருங்கள். ஏனெனில் அதன் உச்சம் அவ்வளவு மோசமானது.

எழுதியவர் : லலிதா.வி (28-May-12, 11:33 am)
பார்வை : 393

மேலே