குடிபழக்கதின் உச்சமும் அதன் விளைவுகளும் (பகுதி -3)

குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் சொல்லும் காரணங்களையும் அதற்கான அவர்களின் தவறான புரிதலையும் பார்த்தோம்.

இப்போது குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் அறிகுறிகளை பார்ப்போம்.

1) உடல் ஆரோக்கியம் நலிவடைதல்
2) சிவப்பேறிய கண்கள்
3) உடல் எடையில் மாற்றம்
4) எதிலும் ஆர்வமின்மை
5) தகாத செயல்களில் ஈடுபதுதல்
6) உறவுகள், நண்பர்களை விட்டு விலகுதல்
7) உடற் சுத்தத்தில் கவனமின்மை

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொத்தத்தில் சராசரி மனிதர்களிடம் இருந்து வித்தியாசமாக காணப்படுவர்.

யாரும் நெருங்க விரும்பாத தோற்றம் கொண்டிருப்பார்கள். அப்படி ஆல்கஹாளால் பாதிக்கப் பட்டவர்களை அப்படியே விட்டு விட கூடாது. நம்மால் இயன்றவரை அவர்களுக்கு குடிப்பழக்கத்தினால் ஏற்படும் பிரச்சனைகளை சொல்லி ஆல்கஹாலினால் பதிக்கப்பட்டவர்களுக்குள் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

குடிப்பழக்கத்தின் உச்ச நிலையை அவர்களுக்கு எடுத்து சொல்லலி நல் வழி காட்டுவோம்.

குடிப்பழக்கத்தின் உச்ச நிலையை காண்போம்;

1) அளவின்றி குடிப்பது
2) தேவையின்றி கோபப் படுவது / சண்டையிடுவது
3) குடிப்பழக்கத்தை நிறுத்தும் முயற்சியில் தொடர்ந்து தோல்வியுறுவது.

4) பசியின்மை / தூக்கமின்மை
5) மன அழுத்தம் அதிகரித்தல்
6) குடும்பத்தில் நிதி நெருக்கடி
7) முற்றிய நிலையில் மதுவிற்காக சொந்த வீட்டில் திருடுவது

8) மதுவிற்காக உடமைகளை விற்பது
9) மதுவிற்காக தவறான காரியங்களில் கூட ஈடுபடுவது

10) மனிதன் என்ற நிலை மாறி விலங்கினும் மோசமாக நடந்துக் கொள்வது.

தோழர்களே குடிப்பழக்கம் தரும் அற்ப சந்தோஷத்திற்காக உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் சமுதாயத்தில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சராசரி மரியாதையையும் இழந்து விடாதீர்கள்.

பெருகிவரும் நாகரீக சீரழிவில் குடிப்பழக்கமும் ஒன்று.

ஆம்!
பார்ட்டிகளில் குடிப்பது நாகரீகம் என சொல்லி குடிப்பழக்கம் இல்லாதவரையும் குடிக்க வைப்பது. பின் அதுவே நண்பர்களின் பிறந்த நாள், திருமண நாள் என்று நீடித்து அதுவே நாளடைவில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது.

இன்னும் சிலர் ஆல்கஹாலில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று தெரிந்துக் கொள்ளும் ஆர்வத்தில் குடிப்பார்கள்.

தோழர்களே சந்தேகத்திற்கு இடமின்றி ஆல்கஹால் உடலையும் மனதையும் கெடுக்கும் கொடிய விஷமே. இதை நீங்கள் உணர வேண்டும்.

எழுதியவர் : லலிதா.வி (28-May-12, 11:52 am)
சேர்த்தது : Lalitha Vijaykumar
பார்வை : 396

மேலே