குடிபழக்கதின் உச்சமும் அதன் விளைவுகளும் (பகுதி -4)

தோழர்களே ஆல்கஹால் குடித்தவுடன் அது விரைவில் ரத்த ஓட்டத்தில் கலந்து விடுவதால் மூளைக்கும் செல்கிறது இதன் விளைவு தான் நீங்கள் சுகம் எண்டு எண்ணிக் கொண்டிருக்கும் போதை.

இயல்பான நிலையிலிருந்து மாற்றி உடலை அழிக்கும் விஷம் தான் ஆல்கஹால். ஆல்கஹால் ஊக்கத்தை இழக்க செய்து சோர்வை ஏற்படுத்தும் ஒரு வித போதை மருந்தாகும்.

தோழர் / தோழியர்களே எனக்கு தெரிந்தவரை குடிப்பழக்கத்தினால் ஏற்படும் விளைவுகளையும் அதன் உச்சத்தையும் பகிர்ந்துக் கொண்டேன்.

ஆல்கஹாலினால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை உங்களால் முடிந்தவரை அதன் விளைவுகளை சொல்லி அவர்களுக்கு புது வாழ்வு கொடுங்கள். நம்மை போன்ற நல் வாழ்வு அவர்களும் வாழ வழி வகுங்கள்.

நாளைய சமுதாயம் ஆரோக்கியமானதாக இருக்க நாமும் காரணாமாக இருப்போம்.

தோழர்களே குடிபழக்கத்தின் உச்சத்தை படித்திருப்பீர்கள். குடிப்பழக்கத்தினால் நாம் அடைய போவது ஒன்றும் கிடயாது. இழக்க போவதே அதிகம்.

அதனால் தான் சொல்கிறேன் இளைஞர்களே.

அன்பை குடியுங்கள்
பண்பை குடியுங்கள்
கொள்கையை நித்தம் குடியுங்கள்
லட்சியத்தை குடியுங்கள்

ஆல்கஹாலை மட்டும் ஒரு போதும் குடிக்கவே குடிக்காதீர்கள். இது என் தாழ்மையான வேண்டுகோள்.

ஊர் போற்றும் நல்லவனாக
பார் போற்றும் வல்லவனாக
வாழ்ந்து பிறந்த நாட்டிற்கும், பெற்ற தாய் தந்தையர்க்கும் பெருமை சேருங்கள்.

உங்களால் முடியாது ஒன்றும் கிடையாது இந்த உலகத்தில். நீங்கள் தான் நாளைய இந்தியாவின் நம்பிக்கை நட்ச்சத்திரங்கள் என்ற கர்வத்தோடு கண்ணியமாக வாழ்ந்துக் காட்டுங்கள்.

இதை உங்கள் தாயின் குரலாக எண்ணி இனி குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள்.

புது வாழ்க்கை வாழுங்கள். வாழ்க்கையை நல்ல முறையில் அனுபவியுங்கள்.

மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் கட்டுரையை முடிக்கிறேன்.

எழுதியவர் : லலிதா.வி (28-May-12, 12:05 pm)
பார்வை : 1076

சிறந்த கட்டுரைகள்

மேலே