சேல் ஆலே விழிகள் ....

SALE ஆலே விழிகள்
இங்கு ஆலோலம் பாடுது
செல் ஆலே இதழ்கள்
சொல் ஆடல் புரியுது
நூல் ஆலே சேலைகள்
நூற்றிற்கு ஐம்பது
கழிவாய் வருகுது

ஆடிக் கழிவு வந்தது
மாசிக் கழிவிற்கு
முன்னே நின்றது
ஆ ஆ ஆ ......
SALE ஆலே விழிகள்.....

பால் போலே வேட்டிகள் பனியன்கள்
கழிவாயினும் வெள்ளையாய் இருக்குது
ஒரு ஓட்டை உள்ளே இருந்தாலும்
சட்டை போட்டால்
வெளியே தெரியவா போகுது
ஆ ஆ ஆ ....
SALE ஆலே விழிகள் ....

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (15-Jul-12, 9:46 am)
பார்வை : 520

மேலே