எழுத்து.காமில், A. பிரேம் குமாரின் ஒரு வேண்டுகோள் (பெற்றோரைப்பற்றியது)

முதலில், அனைத்து உறுப்பினர்களுக்கும் என் வணக்கங்கள்.

எழுத்து.காமில், அனைத்து உறுப்பினர்களிடத்தும், A. பிரேம் குமாரின் ஒரு வேண்டுகோள்.

இது புதுயுகமாக இருக்கலாம், எனக்குத் தெரியாது.
ஆனால் என் வேண்டுகோள் யாதெனில், படைப்பாளிகள், குறிப்பாக காதல் கவிதைகள் அதிகம் எழுதும் உறுப்பினர்களையும் சேர்த்து வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன்,
தயவுசெய்து இன்றுமுதல், கவிதைக்காகவும், பெற்றோர் உணர்ச்சிகளை, சுயநல உணர்ச்சிகளோடு ஒப்பிடாதீர். பெற்றோர் உணர்ச்சிகளை, தவறாக குறிப்பிடாதீர்.

காதலை போற்றுங்கள்
நான் கேட்கப்போவதில்லை
காதலை தூற்றுங்கள்
நான் கேட்கப்போவதில்லை

அனைத்தும் படித்துவிட்டு, நான் முதல் வகுப்பு படிக்கும்போது இருந்த teacher இருந்தாங்களே, அவர்கள் படுமோசம் என்று கூறாதீர்கள். ஒவ்வொரு எணிப்படியும் வாழ்வில் உங்களை, அதற்க்கான பாடம் புகட்டி உயர்த்தியதால், இன்று நீங்கள் இப்போதடைந்திருக்கிற நிலை. இதில் ஒரு ஏணிப்படியின் கட்டை அன்றே உடைந்திருந்தால், அவ்வளவுதான்.
இதேபோன்றுதான், பெற்றோர்களும், பார்த்து பார்த்து பிள்ளைகளை வளர்த்தவர்கள்.

நான், இன்றும் மறப்பதில்லை, பெங்களூரில் நடந்த ஓர் நிகழ்வை. விடியற்காலை 6 மணியளவில், தெருவில் விளையாடிக்கொண்டிருந்த இரு மிகச்சிறு பிள்ளைகளில், ஒரு பிள்ளையை நாய் கடித்து கடித்து, கடித்து கடித்து, கடித்து கடித்து கொன்றுவிட்டது, பெற்றோர்கள் கண் அயர்ந்த நேரத்தில்.

இதை மனதில் நிலைநிறுத்தி படிக்கும், படித்துக்கொண்டிருக்கும் ஒவ்வொரு கணமும், என் மனம் அன்று, அப்பெற்றோர்கள் இழந்துத் துடித்தாரே; அவ்வாறே என் மனநிலை துடித்தது.

அன்றும், இன்றும், எந்தவொரு குழந்தை உள்ளவர்களைப் பார்த்தாலும், குழந்தையை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள் என்பேன்.

என் வேண்டுகோள் இதுதான், தயவுசெய்து, இனி பெற்றோரை கீழிறக்கி எழுதாதீர், அவ்வளவுதான்.

(இதில் விதிவிலக்கு, கொடும்பாவிகளை பெற்றோராய் கொண்டவர்கள் மட்டும்தான், இருந்தும், அவர்களும் பெற்றோர்கள்தான் என்ன செய்ய..)

எழுதியவர் : A. பிரேம் குமார் (22-Jul-12, 1:49 am)
பார்வை : 272

சிறந்த கட்டுரைகள்

மேலே