இதேல்லாம் ஒரு கதையா?

ஒன்பதாம் வகுப்பு முதல், பரெண்டாம் வகுப்பு வரையிலான நான்கு வருட நட்பிற்க்கு பிறகு அவள் மீது அவனுக்கு ஏற்பட்டது காதல்..... காதல் வந்த மறு நாளே அவள் தன் சொந்த ஊருக்கு சென்றுவிட, இவன் தன் காதலை சொல்வதற்க்கு தவித்தான்.... உடனே தன் அலைபேசியை எடுத்து அவளின் அம்மா அலைபேசிக்கு செய்தி அனுப்ப ஆரம்பித்தான்.... பல தடுமாற்றங்களுக்கு பின், தன் காதலை வெளிப்படுத்தினான். அவள், முதலில் ஏற்க மறுத்தாள். இரண்டு நாட்களுக்கு பின் காதலை ஏற்றுக் கொண்டு, அவனை தொலைவில் இருந்தபடியே காதலிக்கிறாள். சில நாட்களுக்கு பிறகு அவர்கள் எழுதிய அரசு தேர்விற்கான முடிவு வெளிவருகிறது. அதில் அவள் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுகிறாள். அவன் கணக்கு பாடத்தில் கோட்டை விட்டான்... இதனால், தன் கதலியிடம் பேச முடியாமல் தவிக்கிறான். அவளும் இவனை கண்டு கொள்ளவில்லை. இப்படியே சில நாட்கள் சென்றன. இவன் மறுத்தேர்வு எழுதிய பின் அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுகிறான்... அவளோ காதலை மறந்து வேண்டா வெறுப்போடு பேசுகிறாள். காரணம், அவன் தேர்ச்சி பெறாததே. அவளின் பேச்சில் மாற்றம் கண்ட அவன், அவளிடம் காரணத்தை கேட்கிறான். அவள் காரணத்தை சொல்ல, அவன் மனமுடைந்து போகிறான்.... ஆனால், அவளின் இந்த முடிவு தற்காலிகம் தான்... அவளும் அவனை விரும்புகிறள். ஆனால், அவள் எதிர்கால வாழ்கையைப் பற்றிய குழப்பத்தில் இருக்கிறாள்... அவன் மனம் வெறுத்து சில நாட்கள் பைத்தியகாரனாய் திரிகிறான்... பிறகு, அவன் சென்னைக்கு சென்று அலங்கார வேலை பார்த்து, தன் உழைப்பினால் நல்ல நிலைக்கு வருகிறான்... இவனை பற்றிய எந்த செய்தியையும் அறியாத அவள் அவனிடம் மன்னிப்பு கேட்க நினைக்கிறாள்... அவன் அழைப்பேசி எண்ணை அவன் தோழி ஒருவளிடம் வாங்கி அவனை தொடர்பு கொள்கிறள்... நீண்ட நாள் கழித்து தன் காதலனின் குரலை கேட்க போகிறோம் என்ற ஆவலில் இருந்த அவளுக்கு ஏமாற்றம்... அந்த குரல் அவன் நண்பனுடையது. அவன் எங்கே என்று கேட்டாள். அவன் நண்பன் அழுது கொண்டே..... அவன் விபத்தில் இறந்துவிட்டதாக கூறுகிறான்..... ஆம், அவள் அவனை தொடர்பு கொள்வதற்க்கு சில மணி நேரத்திற்க்கு முன்பு அவன் வண்டியில் செல்லும் போது எதிரில் வந்த சிற்றுந்து மோதி சம்பவ இடத்திலேயே இறந்து போகிறான்.

அவன் அவள் மீது வைத்திருந்த காதல் உண்மையானது... எனவே தான் அவள் அவனை தேடி வருகிறாள்... ஆனால், விதி செய்த சதியால் எல்லாம் முடிந்து போகிறது...

இக்கதையை படித்து விட்டு, இதேல்லாம் ஒரு கதையா என்று நினைக்க கூடும்... இது எனது முதல் கதை என்பதால் தான் இப்படி.... நன்றி!!!

எழுதியவர் : செல்வ சாரதன் (23-Jul-12, 1:48 am)
பார்வை : 427

மேலே