இந்த அசிங்கம் எனக்கு தேவையா?…

வாழ்க்கையில் சில தருணங்களில் நடக்கும் நிகழ்வுகள் பல வருடங்களுக்கு நமக்குள் ஓடி கொண்டே இருக்கும். அதிலும் எதிர்பாராமல் நிகழும் எதார்த்தங்களை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. உதாரணமாக நம்மை கடந்து போகும் அறிமுகம் இல்லாத ஒருவர் பலநாள் பழகியவரை போல் நடந்து கொண்டால் சற்று யோசிக்கதானே வேண்டும். அதிலும் இந்த மாதிரி பழகி கொள்ளையடிக்கும் கும்பலும் உண்டு. ஆனால் நிமிடத்தில் பழக்கம் ஆகி உயிர் உள்ளவரை நினைத்து பார்க்கும் அளவுக்கும் சில நிகழ்வுகள் நடக்கும்…, என் வாழ்வில் நடந்தும்விட்டது.

ஒரு மாதங்களுக்கு முன்பு, காலை 09 மணி வழக்கம் போல் காலை உணவை முடித்து விட்டு கோயம்பேடு Bus Stop -க்கு ஜெய் நகரில் உள்ள என் room -ல் இருந்து கிளம்பினேன். கோயம்பேடு Park வழியாக நடந்து வரும் போது நான்கு step தள்ளி ஒரு பெண் எனக்கு சரி சமமாக நடந்து வந்தார்கள். பார்ப்பதற்கு தில்லாலங்கடி படத்தில் தமன்னாவுக்கு தங்கச்சியாக(sanchita shetty) வரும் side actoress -ஐ போல் இருப்பார்கள். ஊருக்கே கேட்கும் அளவிற்க்கு செல்போனில் யாருடுனோ சத்தமாக பேசிக்கொண்டே வந்தார்கள். அவங்க பேசுவதை வைத்து அவங்க boy friend உடன் பேசுகிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.

Road cross பண்ணும் இடத்தில் செல்போனை காதில் வைத்தபடியே எனக்கு மிக அருகில் வந்து பேசிக்கொண்டே நான் cross ஆகும் போதே அவங்களும் cross ஆகி விட்டார்கள். road cross பண்ணும் போது அவங்க பேசிய சத்தம் வாகனங்களின் சத்தத்தை விட அதிகமாக இருந்தது. ஆனால் நான் இதையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. கோயம்பேடு பஸ் ஸ்டாப் உள்ளே சென்றதும் அமைந்தகரை செல்ல எந்த bus தயார் நிலையில் உள்ளது என ஒரு நோட்டம் விட்டேன். 15B , 159D , இரண்டு பேருந்துகளும் தயார் நிலையில் இருக்க எது முதலில் கிளம்புகிறதோ அதில் ஏறி செல்லலாம் என்று பஸ்சில் ஏறாமல் நின்று இருந்தேன்.

கால கொடுமை அந்த செல்போன் party என் பக்கத்தில் நின்று போனில் கொஞ்சம் கூட volume குறைக்காமல் பேசிக்கொண்டே இருந்தார்கள். அங்கு இருந்த பல பேர் அந்த பெண்ணையே பார்த்தார்கள். ஆனால் அவங்க எதையுமே கண்டுகொள்ளவில்லை. அப்படியே நிமிடங்கள் போக அந்த boy friend என்ன கேட்டிருப்பனோ ? …. தெரியவில்லை. அதற்க்கு இந்த பெண் ” டேய்!.. நீ அடங்குடா எல்லாம் எனக்கு தெரியும் நான் ஒன்னும் சின்ன பொண்ணு கிடையாது ” என்று சத்தமாக சொன்னங்க. சொல்லிவிட்டு போனை காதில் இருந்து சற்று தள்ளி வைத்து விட்டு என் பக்கமாய் திரும்பி ஏதோ மெதுவாக சொன்னார்கள் . சத்தியமாக எனக்கு ஒன்றுமே கேட்கவில்லை, அதுவும் இல்லாமல் அப்போதுதான் அந்த இடம் கொஞ்சம் அமைதியாய் இருந்தது. அவங்க என்கிட்டதான் ஏதோ கேட்டார்கள் என்பதை அவங்க என்னை முறைத்து கொண்டே மறுபடியும் போனில் பேசும் போது புரிந்து கொண்டேன்.

மீண்டும் அந்த boy friend -டிடம் “ டேய்!…. நான் கோயம்பேடு பஸ் ஸ்டாப்ல இருக்கேன், தி . நகருக்கு எந்த பஸ்ல வரணும்னு எனக்கு தெரியும்… நீ அங்கேயே wait பண்ணு.. ” என்று சொல்லி கொண்டே மறுபடியும் போனை காதில் இருந்து சற்று தள்ளி வைத்தார்கள். இப்போது என் பக்கம் நன்றாக திரும்பி பல்லை கடித்து கொண்டே ” டேய் !.. உன்னதான்டா கேட்கிறேன் தி.நகருக்கு எந்த பஸ்சில் போகணும்…” என்று கேட்க.., எனக்கு கொஞ்ச நேரத்தில் சுய நினைவை இழந்தார் போல் ஒரு உணர்வு. சுற்றும் முற்றும் பார்த்தேன் எல்லோரும் என்னையே பார்த்தார்கள். யாருடா இவ இவ்ளோ திமிரா பேசுறாலே என்று எனக்குள்ளே சொல்லிகொண்டேன். ஒரு second -ல் என்னமோ நடந்து விட்டது.

பொறுமை இழந்த அந்த பெண் ” டேய் !.. சீக்கிரம் சொல்லுடா…” என்று மீண்டும் மிரட்ட உடனே நான் ” 27 C வருங்க…. அதுல போகணும்” என்றேன். இப்போது காதை விட்டு தள்ளி போன mobile மீண்டும் காதருகில் வந்தது. அந்த boy friend -டிடம் “ டேய்!…. 27 C -ல வரேன். அங்கேயே இரு வந்துடுறேன்.. ” என்று சொல்லிக்கொண்டே வேறு பக்கமாக போக திரும்ப…., நான் குறுக்கிட்டு 27C அந்த பக்கம் வரும்ங்க என்றேன். அவங்களும் ஒரு OK , Thanks , எதுவும் சொல்லாமல் போனை காதில் வைத்தபடியே இடத்தை காலி செய்தார்கள். அவங்க போன பிறகு அங்கு இருந்த அனைவரும் என்னையே ஒரு மாதிரியாக பார்த்தார்கள்.

உண்மையிலே என்னை ஒரு கேனை, இளிச்சவாயன், இன்னும் கேவலமான அடைமொழிகளுக்கு சொந்தக்காரன் என்று அங்கு இருந்தவர்கள் அறிந்திருப்பார்கள். அதுவரை 15B , 159D இரண்டுமே கிளம்பவில்லை. அந்த அசிங்கத்திற்கு மேல் என்னால் வெளியே நிற்க கேவலமாய் இருக்கவே ஓடி போய் 159D -யில் ஏறி கொண்டேன். Office சென்றதும் உடன் வேலை செய்பவர்களிடம் சொன்னதும் ரசித்து ரசித்து சிரித்து என்னை கிண்டல் செய்தார்கள். இன்னும் எத்தனை நாள் இந்த சென்னையில் வேலை செய்வேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் கோயம்பேடு என்றாலே எனக்கு உடனே நினைவுக்கு வருவது இந்த incident – தான்…..

எழுதியவர் : Rajankhan (25-Jul-12, 2:29 pm)
பார்வை : 764

மேலே