கவிஞர் திரு.தங்கநிழல்

மதுரை (1) ல் வசித்து வந்த கவிஞர் திரு.தங்கநிழல் என்பவர் 06.03.1964 ல் என் தகப்பனார் "சோழன் உவந்தான் வாழும் கொடைவள்ளல் உயர்திரு C.கன்னியப்ப முதலியார் அவர்கட்கு அளித்த கவிதைக்கொத்து!"

"செழுந்தமிழ் ஆர்வமும் சிந்தையில் ஈகையும்
விழுமிய எண்ணமும் மேன்மையும் பூண்ட
தழைத்திடும் சோழன் உவந்தான் வாழும்
தகைமிகு கன்னியப்பர் நாளும்
எழுச்சியின் அரும்பணி என்றும் ஓங்குக!
கண்ட்ரோல் காலத்து மக்களை காத்த
கன்னியப்பர் கன்னலாய் வாழ்க!
கல்விக்கு உதவி உதவி கனிந்த
கன்னியப்பர் சீருடன் வாழ்க!

இறைவன் அருளால் குறையொன்று மின்றி
வறுமை நீக்கும் வள்ளலாய் வாழ்க!
கருணை மிகுந்த கன்னியப்பர்
கன்னித் தமிழின் செல்வராய் வாழி
பொன்னி பாய்ந்திடும் தஞ்சை மன்னன்
சோழன் உவந்தான் நகரின் மேலாய்
சோழன் போலே நீடூழி வாழ்க!

இன்று 89 வயது ஆகும் என் தகப்பனார்க்கு 1964 ல் 41 வயது. சாதி மத பேதமின்றி, அரசியல் கட்சிகள் பாகுபாடின்றி கொடுத்து உதவியவர். கவிஞர் திரு.தங்கநிழல் என் தகப்பனார்க்கு மூத்தவரா, இளையவரா நான் அறியேன். கவிஞர் திரு.தங்கநிழல் எங்கிருக்கிறார் என்றறிந்தால் சந்தித்து மகிழ்வேன்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jul-12, 5:33 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 209

சிறந்த கட்டுரைகள்

மேலே