நான் ஏரோநாட்டிக்கல் ஸ்டூடண்டான கதை-2

எங்குடும்பத்துல எல்லாருமே எஞ்சினியரிங் தான். அதாவது என் பெரியப்பா, சித்தப்பா குடும்பத்த எல்லாம் சேத்து சொல்றேன். மூணு பேரு ஈ.சி.ஈ, ஒரு அக்கா ஐ.டி. ஒரு அண்ணனுக்கு ஏரோநாட்டிக்கல் படிக்கணும்னு ஆச. ஆனா அவனுக்கு மார்க் பத்தல. அதுனால அவனும் ஈ.சி.ஈ லிஸ்ட்ல தான் இருந்தான். இவங்கள்ள ரெண்டு பேருக்கு பேங்க எக்ஸாம் எழுதி வேலை கெடைச்சுருச்சு. ஒருத்தனுக்க நெரந்தர வேல எதுவும் கிடைக்கல. இன்னொரு அண்ணன் படிச்சிட்டுருக்கான்.

ஒருவழியா கஷ்டப்பட்டு நான் பன்னெண்டாங்கிளாஸ் முடிச்சுட்டேன். ரிசல்ட்டும் வந்துருச்சு. என் அக்காதான் எனக்கு மார்க் பாத்துச் சொன்னா. 1130ன்னுட்டா. நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன். நீ ஒழுங்கா என் ரிசல்ட்ட பாத்து சொல்லுண்ணேன். ஒன் ரிசல்ட்ட தாண்டா சொல்றேண்ணா. என்ன பண்றது எஞ்சினியரிங்ல குப்பை கொட்டணும்னு தான் விதி போலயிருக்குன்னு நெனச்சு மனச தேத்திகிட்டேன்.

ரிசல்ட் வாறதுக்கு முன்னாடியே வீட்டுல நாலு கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு எஞ்சினியரிங் காலேஜ்ல என்ன சேக்க முடிவு பண்ணினாங்க. எங்க ஸ்கூல் மேனேஜ்மென்ட் நடத்துற காலேஜ் தான் அது. ரிசல்ட் வந்த ஒடனே அங்க போய் பேசிட்டாங்க. அந்த காலேஜ்ல என்ன டொனேஷன் இல்லாம வருஷத்துக்கு 15000 பீஸ்ல சேக்க ஒத்துகிட்டாங்க. ஆனா எனக்கு அந்த காலேஜ் புடிக்கல. ஏன்னா அது ஒரு மொக்க காலேஜ். எனக்குப் புடிக்கலனு வீட்ல எப்பிடி சொல்றதுன்னு தெரியல. அப்ப தான் எனக்கு எதிர்பாராத எடத்துலேருந்து ஒரு ஒதவி கெடச்சுது.

அப்ப தான் சொந்தக்காரங்க என்ட்ரி கொடுத்தாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஐடியாவோட வந்தாங்க. பையன என்ன படிக்க வைக்கப் போறீங்க? மெரைன் படிக்க வைங்க, சி.ஏ பண்ண வைங்க. இப்பிடி எக்கச்சக்கமான ஐடியா. ஆனா எனக்கு கட் ஆப் கம்மி தான். மெரைனுக்கு நல்ல காலேஜில சீட் கெடைக்கும்னு தோணல. அதனால அந்த ஆச எனக்கு இல்ல. வேற என்ன பண்லாம்னுட்டு அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சலிங் புக்க புரட்டிப் பாக்கும் போது எனக்கு அந்த ஐடியா வந்துது. கெமிக்கல் இல்லன்னா ஏரோநாட்டிக்கல் எடுக்கலாம்னு தோணுச்சு. ஆனா அப்பாம்மாட்ட எப்படி சொல்றது?

அப்ப தான் சென்னையில சாப்ட்வேர் எஞ்சினியரா இருந்த என் அக்காவோட புருஷன் போன் பண்ணினாரு. ஒனக்கு என்ன படிக்க விருப்பம்னாரு. கெமிக்கல் இல்லன்னா ஏரோநாட்டிக்கல்னேன். கெமிக்கல் வேண்டாம்பா, ரொம்ப ரிஸ்கான வேல. பேசாம ஏரோநாட்டிக்கல் எடுன்னாரு. ஊர்ல ஏரோநாட்டிக்கலுக்கு நல்ல காலேஜ் எதுவுமே இல்ல. அதுனால வெளிய தான் போகணும். எப்பிடியாவது ஒரு நாலு வருஷம் வெளிய காலத்த ஓட்டிட்டா கொள்ளாம்னு தோணுச்சு. ஏன்னா நான் அப்ப ஒரு லவ் ஃபெய்லியர். ஊர்ல தங்கிருந்தா அந்த பொண்ண அடிக்கடி பாக்க வேண்டியிருக்கும். மனசுக்குக் கஷ்டமாயிருக்கும். அதுனால கன்னியாகுமரிய விட்டு வெளிய வந்துட்டா நல்லதுன்னு நெனச்சேன்.

அவரோட ஐடியா எனக்குப் புடிச்சுருந்துது. அவரே எனக்குன்னுட்டு வீட்ல பேசுறேன்னாரு. வீட்டுல கொஞ்ச நாளைக்கு பயங்கரமான சண்ட. நான் ஸ்டராங்கா நின்னேன். ஒரு வழியா வீட்டுல சம்மதிச்சுட்டாங்க. அதுக்கப்புறம் எந்தக் காலேஜ்னு யோசன வந்துது. எம்.ஐ.டில சேருற அளவுக்கு எனக்கு கட் ஆப் அதிகமில்ல. அதனால கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ செலக்ட் பண்ணியாச்சு. கவுன்சிலிங் போறப்ப டிரெயின்ல வச்சு கூட அம்மா சண்ட போட்டாங்க. எப்பிடியோ ஒருவழியா கவுன்சிலிங் முடிஞ்சு அந்தக் கோயம்புத்தூர் காலேஜ்ல எனக்கு எடமும் கெடச்சுருச்சு. நான் ஏரோ நாட்டிக்கல் ஸ்டூடண்ட் ஆயிடட்டேன். ஆனா அதுக்கப்புறம்?

எழுதியவர் : (27-Jul-12, 7:22 am)
சேர்த்தது : பைத்தியக்காரன்
பார்வை : 272

மேலே