கவிதையும், கருத்தும் ---நான் ஏன் ரசிகன் ,எதற்கு ?

ZEN சிந்தனை கவிதைகள் தத்துவார்த்தமானவை சிறியவை
அழகியவை கலையில் பான் சாய் போல் எழுத்தில் ZEN கவிதைகள்

பான் சாய்

விருட்சங்கள்

எடுத்த

வாமன அவதாரம்

---என்று எழுதினேன். அது போல் தான் ZEN கவிதைகள் சிறியவை
உற்றுப் பார்த்தால் அங்கே ஒரு தத்துவ
விருட்சமிருக்கும்
உங்கள் கவிதைகள் பொதுவாகவே
இங்கு பதிவாகும் காதல் கண்ணீர்
சமுதாயப் புலம்பல் கவிதைகளில்
இருந்து வித்தியாசமாக நிற்கின்றன
அபி நீரொழிய பாலுண் குருகு. அவர்
அடையாளம் காட்டியதால் உங்கள்
கவிதைகளைப் படித்தேன் சிறப்பாகவே
இருக்கின்றன இக்கவிதைகளும்
விதிவிலக்கல்ல.

ஜென் (மாதிரியான) கவிதைகள்.
என்ற உங்கள் LITERARY HONESTY --
இலக்கிய நேர்மையை பாராட்டுகிறேன்
ஏன் பட்டியல் போடுகிறீர்கள் ?
நான் உன் முதுகைச் சொறிகிறேன்
நீ ஏன் முதுகைச் சொறி என்பது
ஆரோக்கியமான இலக்கிய உறவாடலும் இல்லை உரையாடலும்
இல்லை ஆங்கில கவித் தளத்தில்
எனது FAVORITE ---பிடித்த கவிஞர்கள்
என்று ஒரு பட்டியல் தந்துவிட்டு
இப்படி எழுதினேன் IF YOU WRITE
A FEW MORE GOOD LINES YOU ARE
ALSO MY FAVORITE .

எனது பலா பட்டியல் நெடியது முடிவில்லாதது நேற்று எழுதத் துவங்கியவனுக்கும் அதற்கு முன் எழுதிய வனுக்கும் இன்று எழுதுகிறவனுக்கும்
நாளை எழுதப் போகிறவனுக்கும்
நான் ரசிகன் இவர்கள் இன்னும் சில
சிறந்த வரிகளை எழுவார்களேயானால் .

----கவின் சாரலன்

கவிக் குறிப்பு :ரமேஷ் ஆழம் எழுதிய சிந்திக்கத்
தூண்டும் ஜென் (மாதிரியான ) கவிதைகள்
கருத்தில் சொன்னவை

எழுதியவர் : கவின் சாரலன் (16-Aug-12, 10:11 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 229

சிறந்த கட்டுரைகள்

மேலே