எக்கூ

ஆம்லேட் போட முடியாவிட்டால் என்ன
பொரிந்தால் குஞ்சு; கூவினால் கோழி
சமைத்தால் சிக்கன் பிரியாணி
சீனாக் காரன் சமைத்தாலோ சில்லி
சிக்கன்

இதைத்தான் கவிஞர் வ ம அவர்கள்
சூசகமாக கூ முட்டை என்று சொல்லியிருக்கிறாரோ கூ முட்டை
கூ கூ முட்டை கொக்கர கூ முட்டை
என்று கோழியின் கூவலாய் விரியும்

சரி இதை டார்வினின் பரிணாம
வளர்ச்சி தத்துவ நோக்கில் ஆராய்ச்சி
செய்வோம் இது கவிஞர் ஹரி எழுதிய
"ஆஹா இதுவன்றோ தத்துவம் " என்ற
தத்துவக் கவிதையின் விளக்கம் என்பதை நினைவில் நிறுத்திக் கொண்டு
படிக்க வேண்டுகிறேன் பரிமேல் அழகர்
அடியார்க்கு நல்லார் போல் சுற்றி
வளைக்காமல் வ ம சுருக்கமாக
இரண்டு வார்த்தைகளில் கூ முட்டை
என்று எழுதி என்னை டார்வினின்
தத்துவத்திற்கு இட்டுச் செல்கிறார்

சார்ல்ஸ் ---கவிஞர் இல்லை
சார்லஸ் டார்வின்,அறிவியலுக்கு
புதிய திசை காட்டிய அறிவியல் ஞானி
என்ன சொல்கிறார் பாப்போம்
பிராணிகளின் உயிர் வாழ்தலில்
வாழ்க்கைப் போராட்டம் துவங்கிய
போது SURVIVAL OF FITTEST என்ற தியரிப் படி பல உயிரினங்கள் தோற்று
மடிந்து அழிந்து போயின
முட்டை உருவாகிய போதே
மடிந்து உணவாகிறது கூ கூ என்று
கூடைகளில் கொஞ்சல் குரலில்
கூவித் திரியும் போதும் மடிந்து
உணவாகிறது கூரை மேல் நின்று
கொக்கரோகோ என்று கூவி நிற்கும்
போதும் இறந்து மனிதனின் இரைப்பை
உணவாகிறது அப்படி இருந்தும்
டார்வினின் கூற்றுப் படி கோழியினம்
உலகில் அழியவில்லையே ஏன் ?
யோசிக்கவும்

இது பிரேக் பாஸ்ட் --டிஷ் -ஆம்லேட்
லஞ்ச் டின்னர் தொடரும் இதன் பயன்
எக்கூ மேலும் பேசுவோம்
நன்றி ஹரி

----அன்புடன்,கவின் சாரலன்
கட்டுரை தொடரும் காத்திருக்கவும்

தொடந்து ......
பின் டார்வின் கூற்று தவறா? இல்லை ஏன்?
சிம்பிள் DEMAND AND SUPPLY
எத்தனை கோழிகள் எதனை ஆடுகள் கொல்லப்
படுகின்றவனவோ அதற்குச் சமமாகவோ
அல்லது அதிகமாகவோ PRODUCE செய்து விடுவது
அதைத்தான் செய்கிறார்கள் அதனால் தான்
கோழி இனம் உலகில் அழியாமல் இருக்கிறது
PROJECT TIGER மாதிரி அமைப்புகள் வைத்து
விளம்பரம் செய்து பாதுகாக்கத் தேவை இல்லை
கோழிப் பண்ணை வைத்தால் போதுமானது
ஒரு கூடை கூட போதுமானது வீட்டளவில் .
இதனால் ஆய பலன் :
DRESSED CHICKEN ---லஞ்சிற்கு
---சற்று ஒப்பனையை மாற்றி
டின்னருக்கு
எக்கூ =EGG +KOO =EGGKOO இதை KITCHEN POETRY அல்லது CHIKKEN POETRY என்று ஆங்கிலத்தில் சொல்லுவார்கள் முட்டையும்
அதன் வம்சா வளியனர்களான குஞ்சு கோழிகளை
போற்றும் கவிதை எக்கூ கோழி எல்லோராலும்
வளர்க்க முடியாது அதை கவிதைகளிலாவது
போற்றலாம் அல்லவா டார்வினுக்கும் நன்றி
சொன்ன மாதிரி இருக்கும்

எக்கூ ஒரு எடுத்துக் காட்டு :

வாங்கப் போனது
வாத்து முட்டை
வாங்கியது
கோழி முட்டை
மலர்ந்து சிரித்தது
ஹைபிரீடு
முட்டைக் கோஸு
அதையும்
வாங்கிப் போட்டதில்
கிழிந்தது பைகட்டு
உடைந்தது கோழி முட்டை
பறந்தது கோழிக் குஞ்சு
உருண்டது முட்டைக் கோஸு
சிரித்தது மார்கெட்டு

---இது ஹைக்கூ இல்லை என்பது வெளிப்படை
YELL கவிதையின் தாக்கம் இருக்கிறதோ என்று
சில தேர்ந்த கவிஞர்கள் ஐயுறலாம் ஆனால்
இது PURE EGGKOO எக்க்கூ
நீங்களும் முயலலாம் HUMOUR IS PLEASURE

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-12, 10:18 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 279

சிறந்த கட்டுரைகள்

மேலே