முத்தம்--ஓர் இலக்கிய அலசல் ---கவின் சாரலன்

கவிதை எப்படி எழுத வேண்டும் என்று
நாட்டாண்மை செய்வதை விட கவிதையை ரசித்து கருத்துச் சொல்வது சாலச் சிறந்தது என்று நினைப்பவன் நான்.

---முத்தம் இல்லறத்தின் ஆரோக்கியமான அங்கம்.அசிங்கம் இல்லைஅதை இழந்த சோகத்தை
முத்தங்கள் என்னுள் புதைந்தன என்று மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள்

உதட்டில் உதட்டைப் புதைப்பது
முத்தம் என்று எழுதுவார்கள் நீங்கள்
முத்தங்கள் புதைந்ததாக எழுதியிருப்பது ஒரு வித்தியாசமான கற்பனை.
உங்களை கவிமாமணி என்று அழைத்த
நியாயத்தினை உங்கள் கவிதை வரிகளில் நிரூபித்து வருகிறீர்கள்
எனது பலா பட்டியலில் உங்களுக்கு ஒரு
இடமிருக்கும்

முத்தம் பற்றி மற்ற கவிஞர்கள் என்ன
சொல்கிறார்கள் என்று பாப்போம்

"பைந்தமிழ் இதழில் பழரசம் தருவாள்

பருகிட தலை குனிவாள் " -

-----கண்ணதாசன்

"இச்சிட்டதை அமுதக் கட்டி என்பார் "

என்று கேலி செய்வார் இந்னொரு பழைய கவிஞர்.

"வேசியின் முத்தம்
விரசம்

மழலையின் முத்தம்
மாசற்ற ஓவியம்

கவிஞனின் சொல் முத்தம்
கவிதைப் புத்தகம் "

-என்று சொல்லுவான் இன்னொரு புதிய கவிஞன்.


கவித் துறவி ஆதி சங்கரன் எழுதிய
துதி இலக்கிய நூல் அழகின் அலைகள்.
இறைவன் அதர பானம் செய்வதற்காக
தேவி உமையின் முகவாய்கட்டையை
விரல்களில் ஏந்தி குனிந்தான் என்று
எழுதுவான். துறவி இறைவன் வீட்டின்
இல்லறத்தையும் அழகாகச் சொல்கிறான்

முக்கனிச் சுவை முத்தான முத்தம்
சிவனும் வேண்டும் இல்லறத் தத்துவம்
அதனால்தான்" அர்த்தமுள்ள இந்து
மதம் "என்று கண்ணதாசனும் எழுதினான்.

முத்தம்
சத்தமில்லாத இசை
சந்தம் தழுவிய கவிதை

----போதுமா சிவபாலன் முத்தோபநிடதம் வாழ்த்துக்கள் *5

----கவின் சாரலன்

கவிக்குறிப்பு : கவி நண்பர் சிவபாலனின் "முத்தம்"
சில கவிதா தீர்த்தங்களுக்கு எடுத்துச் சென்றது
அந்த இலக்கிய அனுபவங்கள் இங்கே உங்களுக்காக கட்டுரையாக.
----அனுபவங்கள் தொடரலாம்

எழுதியவர் : கவின் சாரலன் (8-Sep-12, 10:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 315

மேலே