ஒற்றுமை---கட்டுரை

உலகின் அதிசயங்கள் ஏழு அல்ல,
எட்டு,
அது மனிதனை மனிதனாக அடையாளம் காட்டும் சிரிப்பும்,ஒன்றுபடும் உணர்வும் என்று
அரிஸ்டாட்டில் கூறியிருக்கிறார்.

உலக அதிசயங்களை உற்று நோக்குங்கள்,
சீன பெருஞ்சுவரில் ஒருசேர கலந்திருக்கிறது மஞ்சள் நதியின் நுரையலை,

தாஜ்மஹாலில் ஒன்றாய் சுவாசித்து கொண்டிருக்கிறது ஒரு சோடி கல்லறைகள்,

பாபிலோன் தோட்டத்தில்
திராட்சைகளோடு ஒன்றாய் உறவாடிகொண்டிருக்கிறது வண்டுகள்,

ஈபில் டவரில் ஒருசேர கலந்திருக்கிறது
பல ஆயிரம் வல்லுனர்களின் வியர்வை துளிகள்,

சுதந்திர தேவியின் கைப்பிடி தீபத்தில்
எப்போதும் அணையாமல்
ஒன்றாய் ஒளிவீசிக்கொண்டிருக்கிறது சுதந்திர வாசம்,

இப்படி ஏழு அதிசயங்களிலும்,
ஒரு சேர கலந்திருக்கும்,
மறைந்திருக்கும்,
உலகின் எட்டாம் அதிசயமே
ஒற்றுமை.

ஒரு கல்லூரி மாணவன் வேடிக்கையாய்
கவிதை ஒன்று எழுதினான்,

அன்பே உன்னை பார்க்கும் போதெல்லாம்
விசில் அடிப்பேன்,
அந்த விசில் ஒலி கூட,
நாக்கும்,
விரல்களும் ஒன்றாய் சந்தித்து கொள்ளும்
சந்திப்பே,
ஆனால் நீனோ,
விசிலுக்கு விடையாய் முறைப்பை தொடுத்து என் போகிறாய்,
ஒரு விசில் கூட ஒரு சங்கமம்தான்,
சொல்ல போனால் உலகில் எல்லாமே ஒற்றுமை என்னும் சங்கமம்தான்.

சிரிக்கவோ,
ஒன்று பட்டு உழைக்கவோ தெரிந்தால்,
அமீபா கூட
மனித இனத்தை நாளை அடிமை படுத்த கூடும்.
ஆகவே,
நமது அடையாளங்களை நாம் தொலைக்காமல் பார்த்து கொண்டால்,
எப்போதும் இன்பத்தை,
மனிதன் அடிமை படுத்தி வைத்திருக்க முடியும்.

ஒற்றுமை-ஒரு மொழி,

இந்த வார்த்தை,
உலக அகராதியின் முதல் அகர எழுத்து,

பல தேசத்தின் தலை எழுத்தை எழுதி முடித்த ஆயுத எழுத்து.

மனிதர்தம் மகத்துவம் பேசும் வல்லின போதை,

சாம்ராஜியங்கள் பலவற்றை ஒற்றை புல்லியாக்கிய மெய் எழுத்து,

மனிதர்க்கும் காலத்திற்கும் இடையே நிற்கும் இடையின சுவாசம்.

மொத்தத்தில் மனிதர் மட்டுமே பேச அறிந்த தாய் மொழி.......

எழுதியவர் : துளசி வேந்தன் (20-Sep-12, 11:22 am)
பார்வை : 9839

மேலே