ஊமை காதல்,,,,

ஊமை காதல்,,,,

கசக்கியெறிந்த கந்தல்களாய் உன் கடந்த காலங்கள்,,,எண்ணி எண்ணி,,கண்ணீர் விடுகிறேன்,,,என்னை கண்டுக்கொள்ளாமல் ,,
நீ அவனை நேசித்து சென்ற போதும்,,,

எந்தன் காதலின் பக்கங்களில்,,,நீயே
இருந்திருந்தாய்,,வீனஸ் தேவதையாய்,,,

உன்னிடம்,,காதலை சொல்ல ஒத்திகை எடுத்தேன்,,அவனிடம் கவிதைகளாய்,,,என் நண்பன் என நினைத்து,,,,

அன்று என் கவிதையை களவாடியவன்,,,
இன்று என் காதலையும் களவாடிவிட்டான்,,,

என் தங்கைக்காய்,,,புடவை எடுக்க கடைக்கு சென்றோம்,,,நீயும் நானும்,,அவளோடு,,,

கடைக்காரன் விரித்து வைத்த புடவைகளில்,,உன் கண்களை,,ஓடவிட்டு தவித்தாய்,,,,

எனக்கும் இப்படி எடுத்து தர யாரும் இல்லையே,, என,,,,உன் தவிப்பை,,புரிந்தவனாய்,,,நான்,,,உன் ஆசைகளை,,,நிறைவேற்ற எடுத்த அவதாரம்,,,தான்,,அவதார புருஷன்,,,,

உனக்காய் நான் தேடிய பணி நியமன ஆணை,,,
அதை உன்வசம் கொடுத்த தருணத்தில்,,தானடி,,,நான் உணர்ந்தேன்,,,நீ எவ்வளவு,,வாழ்க்கை போராட்டம் நடத்துகிறாய்,,என்று,,அன்று உதித்தவள் தானடி,,
அழகிய பூவாய்,,நீ என் மனதோடு,,,

ஆனால் அன்றோ நீ,,,மெருகிய புன்னகையில் நன்றி கூறி சென்றாய்,,,என்னில்,,,

ஹா ஹா ஹா ஹா அவதார புருஷன்,,,,

ஒவ்வொரு முறையும்,,உன்னோடு,,பெயர் கூறாமல்,,தொலை பேசியில் அவதாரபுருஷனாய்,,ஆட்கொண்ட,,அவதார புருஷன்,,,,,ஆம்,,அழகில்லாதவன் தான்,,,இந்த அவதார புருஷன்,,,,

ஆகையால் தான்,,,உனக்காய் நான் வாங்கிய புடவைகளையும்,,,,பொருட்களையும்,,,அவனோடு,,,கொடுத்தனுப்பினேன்,,,,,

அன்றும் அவன் அபகரித்து விட்டான்,,,என் காதலை,,,,உன்னிடமிருந்து,,,,அவன் நானாய் மாறி,,,

எப்படி சொல்வது,,,உன்வசம்,,,என் காதலை,,,,,,
நீ அவன் வசம் ஆனபின்பு,,,,

எனக்கிங்கு துரோகம் இழைத்தாலும்,,என் நண்பன்,,என்னில்,,நண்பனே,,,

என் காதலை உணராமல்,,நீ இருந்த பொழுதிலும்,,,நீ என்னுள் வலியே,,,உயிரின் வலியே,,,தானடி,,,என்றென்றும்,,,

உண்மைக்காதலில்,,,இருக்கும் நான் எப்படி உதிர்ப்பேன்,,,,நான் உனக்கென வாழ்ந்ததை,,வாழ்வதை,,இனி வாழபோவதை,,,,,

என் நெஞ்ஜோடு மறைத்து விட்ட,,,காதல் சாயங்கள்,,,கரையும் முன்னே,,,அதை என் குருதியில்,,கலந்து விட்டேனடி,,ப்ரியதமா,,

அவன் நல்லவன் இல்லை என்று உன்னிடம் கூறவும்,,என்னில் மனம் இல்லை,,,,

விளக்கில்,,சிக்கிய விட்டில் பூச்சியாய்,,கருகி போகிறது என் மனம்,,,,,உன் வாழ்க்கை கருகி கொண்டிருப்பதை நினைத்து,,,,

இருந்தாலும்,,,துணிந்துவிட்டேன்,,,நீ என்னை வெறுத்து விடுவாய்,,என்று அறிந்தே,,,உன்னிடம்,,
உண்மைகளை,,,உரைக்க,,,

என் உயிர் நாடியில் இருந்து உண்மையை உரைத்த பொழுதும்,,, ஏற்க மறுத்து விட்டாய்,,,இந்த அனாதையின் ஓலங்களை,,,,
என்னை ஒரு அவஸ்த்தையாய் நினைத்து

இறந்து விட்டேன்,,,நீ என்னை,,துரோகியாய் நினைத்த அந்த ஒரு நொடியில்,,,

இன்று,,,கண்ணிழந்த கவிதை சுவடிகளாய்,,,,
என் உணர்வுகள்,,,,அது என் கல்லறை கல்வெட்டுக்களில் பதிக்கபட்டதுதான்,,
மிச்சம்,,,,

என் வசம்,,நீ வசப்படாமல்,,சென்றாலும்,,சென்று விடு,,,,உன் வாழ்க்கை வசந்தம் பெரவேதானடி,,,
என்னவளே,,,இன்று நான்,,,கடைசி முறையாய்,,,,
அவதரிக்கிறேன்,,அவதார புருஷனாய்,,,,

"நீ யாரை காதலித்து சென்றாலும் சென்று விடு
என் காதலை ஊமையாக்கி உடைமைகொள்ள
எண்ணிவிடாதே,,,,

ஊமையாய் இருந்தாலும் இவன் உந்தன் காதலை உணர்ந்தவந்தான்,,,

வருகிறேன்,,,என் இதய துடிப்பை மாரடைப்பால்
நீ நிறுத்த எண்ணினாலும்,,,,

உன்னைதொடர்ந்தே நான் நிஜங்களிலும் நிழல்களிலும்,,,,,,

உன் புடவை மடிப்பின்
சாயலில்,,,கானலாய்
ஒரு நொடி தோன்றி
மாயும் என் முகச்சாயல்,,,
காய்ந்து போன என்
குருதியின் வாடையில்,,,
புதைந்து போன உன்
நினைவின் சாரல்கள்,,,

என் கல்லறை குழியில்,,,
ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்கும்,,
என் இதய வார்ப்புகள்,,,இன்று,,,
மீண்டும் முளைத்திருக்கிறது,,,
யாருக்குமே புடிக்காத
ஒரு ஊமத்தம் பூவாய்,,,
நான் விட்டு சென்ற,,,
வார்த்தைகளை வாசமாய்,,,
உன்னிடம்,,,உரைக்க,,,

ஆம்,,,

நான் கடவுளால்,,
எமாற்றபட்டவன் தான்,,,
இனி இப்படி,,,என்னில்,,
எத்தனை பிறவிகளோ,,,
தெரியவில்லை,,,,

உன் காதலை சுமந்தும்,,,
உன்னில்,,,உணர்த்த
முடியாதவனாய்,,,

அனுசரன்,,,,,

எழுதியவர் : அனுசரன் (10-Oct-12, 3:31 pm)
பார்வை : 1155

மேலே