"காதலிதுக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்க கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்".!

"காதலிதுக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்க கற்றுக்கொண்டிருப்பவர்களுக்கும், காதலிக்கலாமா என்று யோசித்துக்கொண்டிருப்பவர்களுக்கு மட்டும்".!
தினமும் செய்தித்தாளின் ஏதாவது ஒரு பக்கத்தில் காதலை பற்றிய செய்தி வந்துகொண்டு தான் இருக்கிறது. சில காதல் தோல்விகளுக்கு மத்தியிலும் பல காதல்கள் வெற்றிபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது!
ஆணோ / பெண்ணோ முதலில் காதல் வயப்ப்படுமுன் பல விசயங்களை பற்றி சிந்தித்து செயல்படுவது முக்கியம்.
"என்னடா இவனெல்லாம் புத்தி சொல்ல புறப்பட்டுடானா"? என்று நினைக்காதீர்கள்.
சமீபத்தில் என்னை பாதித்த சம்பவத்தின் சிந்தனை,
நான் பார்த்த காதல்களை பற்றிய சிந்தனையின் வெளிப்பாடு!
காதலிக்க வேண்டும் என்ற அவசரத்தில் செய்யப்படும் தேர்வுகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது கண்கூடான உண்மை.!!!!
என்னை சுற்றயுள்ள நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு விதம்!!!!
பத்து வருடங்களாக காதலித்து பெற்றோரின் சம்மதத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் தோழன்.!
பல வருட போராட்டத்திற்கு பின் பெற்றோரின் சம்மதத்துடன் காதலியை கரம்பிடித்த நண்பன்.!
மூன்று மாத காதலை நம்பி சென்று ஏமார்ந்த தோழி.!
பெற்றோரின் விருப்பமின்றி மணந்து நன்றாக வாழ்ந்து வரும் நண்பன்.!
பெற்றோரின் சம்மதம் கிடைக்காமல் காதலை மறந்து வேறு மணம் புரிந்து, வருந்தி வாழ்ந்து வரும் தோழி.
பல வருடம் காதலித்து பெற்றோரை சம்மதிக்க வைக்க "முடியாமலும், முயலாமலும்" காதலித்த பெண்ணை மறந்த தோழன்!
நான் கண்ட இந்த காதல்களில் மட்டுமல்ல அணைத்து காதல்களிலும் முக்கிய பங்கு பெற்றோர்களே!!!!
உண்மை ! அவர்களின்றி ஏதுமில்லை!!!!
காதலிக்க முடிவு செய்த முதலே அவர்களை பற்றி யோசிக்க வேண்டியது அவசியம்.....!
இந்த ஆண் / பெண் நமக்கு உகந்தவர்களா? நல்லவர்களா? நம் வாழ்க்கைக்கு துணையானவர்களா? உறுதியானவர்களா? இவர்களுடனான வாழ்க்கை சிறக்குமா? என்றெல்லாம் யோசிக்கும் முன் இவர்களை நம் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்வார்களா?
முதலில் அவர்கள் காதலை ஏற்றுக்கொள்ள கூடியவர்களா?
ஏற்றுக்கொள்ளாவிடில் அவர்களை சமாதனம் செய்ய முடியுமா?
அதுவும் முடியாமல் போனால் அவர்களை மீறி திருமணம் செய்து கொள்ளலாமா ?
அது நம்மால் முடியுமா???????
இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா??
ஏதோ காதலிக்கனுமேனு காதலிச்சிட்டு 4 ,5 வருஷம் 25 மணிநேரம் போனில் பேசி, ஊர் சுற்றி, வீட்டில் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதும் பெற்றோரிடம் காதலை பற்றி சொல்லி அவர்கள் ஏற்றுக்கொள்ள முடியாதுன்னு சொன்னதும் " நீ என்ன மறந்துட்டு வேறயாரையவது கல்யாணம் பண்ணிட்டு நல்ல இரு " இந்த மாதிரி வசனமெல்லாம் பேசிட்டு, வீட்ல பார்க்கிற நல்ல வசதியான அணையோ/பெண்ணையோ திருமணம் செய்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா????
ஏன் காதலிக்க நினைக்கும் போதே அப்பா ! அம்மா ! நியாபகம் வராதா?
அவர்களை சமாதனம் செய்ய (அ) மீற தைரியம் இல்லாதவங்க ஏன் காதலிக்கணும் ? மற்றவரை ஏமாற்றனும்?????
இது போல வழக்கமா சில பெண்கள் செய்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன். இதையே சில ஆண்களும் செய்யும் போது ஜீரணிக்க முடியவில்லை.
இப்படி ஒருவரது வாழ்கையை ஏமாற்றி திருமணம் செய்யும் ஆணாகட்டும் / பெண்ணாகட்டும்!!!
அய்யா! அம்மா !
நாளைக்கு நீங்க உங்க பெற்றோர் மாதிரி இல்லாம குழந்தைகளை சுதந்திரமா, தைரியமா வளர்க்க கற்றுக்கொள்ளுங்கள். நீங்களாவது அவர்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
அல்லது அவர்களிடம் மகனே / மகளே நீ காதலிக்க கூடாது, நான் உனக்கு பார்க்கிற, வசதி படைத்த, நம் சாதியை சார்ந்த ஆணையோ / பெண்ணையோ தான் நீ திருமணம் செய்ய வேண்டும். என்று சிறு வயது முதலே சொல்லி வளருங்கள்.
பாவம் அவர்களையும் ஏமாற்றி விடாதீர்கள்.!!!
காதலிப்பவர்களே, காதலிக்க நினைப்பவர்களே, முதலில் நம்பிக்கையும், தைரியமும் இருந்தால் மட்டும் காதலியுங்கள்.

காதலில் ஒரு சில படிகளை வேதனைகளோடு வெற்றியாக்கியவன் என்ற உரிமையில் சொல்லி விட்டேன். பிழை இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி
விக்ரம்

எழுதியவர் : விக்ரம் (19-Oct-12, 9:05 am)
பார்வை : 763

மேலே