.மான்கள்(மாணவர்கள் கூட்டம்) கண்ட கொடுமைகள்

ஒரு இடத்தில் மான்கள் கூட்டம் கூட்டமாக எழில் கொஞ்சும் இடத்தில் சுதந்திரமாக உழைத்து வாழ்ந்து வந்தன.அவற்றில் ஒன்றிரண்டு 12ம் வகுப்பு என்னும் ஆற்றைக் கடப்பதற்காக இடம்பெயர்ந்து வேறொரு இடத்திற்கு வந்தது.அங்கு நிறைய உலக விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் என்று வந்த அந்த மான்கள்
கூட்டம் கண்ட கொடுமைகள் சந்தித்த கொடுமைகள் ஏராளம்.மான்களாய் துள்ளித் திரியும் மாணவர்களை தகுதி(மார்க்) வாரியாய் பிரித்து உட்கார வைப்பது,ஒரு சில மாணவர்களை குறைத்தே பேசுவது,அதிக வீட்டுப்பாடங்களை கொடுத்து கொடுமை செய்வது,உடம்பு முடியவில்லை எனக்கூறியதற்கு போய் சாவு எனக் கூறுவது.வீட்டுப்பாடம் செய்யவில்லை என்றால் படுக்கவைத்து நெஞ்சில் மிதிப்பது ஆசிரியரே கெட்ட வார்த்தைப் பேசுவது .நல்லா படிக்கும் மாணவர்கள் என சிலரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு மற்ற மாணவர்களை குப்பை என ஒரு ஆசிரியர் கூறுவது இது அனைத்தும் நடந்தது ஒரு அரசு பள்ளியில் அல்ல
மெட்ரிகுலேஷன் எனக் கூறப்படும் ஒரு பள்ளியில் எனவே பெற்றோர்களே பேப்பரை பார்த்தவுடன் ,நாங்கு பேர் சொல்கிறார்கள் என பெற்றோர்களிடம் விசாரிக்காமல் அந்த பள்ளியைப் பற்றி அங்குப் படித்த மாணவர்களிடம் விசாரியுங்கள் மார்க் எடுக்க வைப்பதைப்பற்றி மட்டுமல்லாமல் அவர்கள் அங்கு சந்திக்கும் துன்பங்கள் என்ன? என்பதைப் பற்றியும் விசாரியுங்கள் மாணவர்களே நீங்களும் உங்களது நண்பர்களுக்காக ஒரு பள்ளியைத் தேர்ந்தெடுக்காதீர்கள்.

எழுதியவர் : மனதின் மைந்தன் (23-Oct-12, 10:57 am)
சேர்த்தது : manathin mainthan
பார்வை : 325

மேலே