ரயில் பயணம்

இது கதை இல்லை,நிஜம்.நம்ப கதையோட ஹீரோ பெங்களூர் இருந்ந்து சென்னை வந்து சேந்தார்,இரவு 9 .30 pm @ பார்க் ரயில்வே ஸ்டேஷன்,அப்ப தான் நம்ப படத்தோட ஹீரோ கதாநாயகிய பாக்கிறார்.அவங்க கூட அவளது பெற்றோரும் இருந்தனர்.பாத்ததுமே புடிச்சிருந்துச்சு அனால் சொல்ல முடியல..கூடவே நிறைய பேர் ஸ்டேஷன்ல காத்திருந்தனர்.பிரவுன் mixed shined சுடிதார் ,மேக்கப் எதுவுமே இல்ல.ஹெரோஇன் அண்ட் ஹீரோ பாத்துகிட்டாங்க,பேசல,அவ ஏதோ வேற மொழில பேசுன மாதிர தெரிஞ்சுது,கைல போத்திஸ் bag அவங்க அப்பா வச்சிருந்தார்.SO ரயில் வந்தது ஹீரோ பாவம்,அந்த பொண்ணு லேடீஸ் COMPARTMENT ல ஏறிட்டங்கா,இரவு நேரம் அதனால் ஹீரோவும் அவல பாக்கறதுக்காக லேடீஸ் கம்பர்த்மென்ட்-ல ஏறிட்டார்..அந்த பொண்ணுக்கு DIAGONAL ஹீரோ சீட் போட்டு பாத்து கொண்டிருந்தார்.அந்த பொண்ணு கிட்ட இருந்து எந்த RESPONCE ம் இல்லை.மறுபடியும் இரண்டுபேரும் பார்த்துகிட்டங்க,ரயில் கோடம்பாக்கம் வந்து சேர்ந்தது.கதையில் இங்க தான் ஒரு ட்விஸ்ட்,ஹெரோஇன் ஹீரோ வ பாக்க பிடிக்காம அவங்க அப்பா பக்கத்தில போய் அமர்ந்தாள்,ஹீரோ கு செம டென்ஷன் ,கோபமா பாக்க முடியாம இப்படி மறைஞ்சி ஏன் உட்காரனும் ஹெரோஇன் ?? கடவுளை திட்டிகிட்டே அடத்த கம்பர்த்மென்ட் ல அவளுக்கும் தெரியாமல் போய் நின்றார்.ரயில் திநகர் வந்து சேர்ந்தது.அவ லேஸ் சிப்ஸ் சாப்டுக்கிட்டே பின்னாடி திரும்பி பார்த்த ,ஹீரோ ALREADY எஸ்கேப் அண்ட் வாட்சிங் BEHIND .அப்ப தான் நம்ப ஆளுக்கு தெருஞ்சுது அவளுக்கும் பிடிச்சுருக்குனு..ஹீரோ & ஹெரோஇன் சிருச்சிகிடாங்க, ரயில் சைதாபேட் வந்து சேர்ந்தது ..ஹீரோ உடனே கீழ இறங்கி அவளைப்பார்க்க சென்றார் ,அவ குடும்பத்தோடு கீழ இறங்கி சென்றால்.கடைசி பார்வையை மட்டுமே பரிசளித்து ..15 நிமிடம்.இதை விட குட்டி காதல் கதை சொல்ல முடியுமா ??

கதை
திரைக்கதை
வசனம்
இயக்கம்

பரமகுரு கந்தசாமி

எழுதியவர் : பரமகுரு கந்தசாமி (25-Oct-12, 5:37 pm)
பார்வை : 999

மேலே