மனித நேயம்.

ஆஷிஷ் சௌத்ரி,

மும்பையில் சினிமாத்துறையில் நடிகராக தன்பணி தொடர்பவர்,
மும்பை தீவிரவாத பல்முனைக் கொலைகளின் விளைவாக,
அஜ்மல் கசாப் போன்ற தீவிரவாத பயிற்சிபெற்ற நபர்களால் கொல்லப்பட்டதால்
தனது உறவினர்களை இழந்தவர்.

(இவரின் சகோதரியும் அவரது கணவரும், தாக்குதலின் இலக்காகி,
ஓப்ராய் ஓட்டலில் உணவருந்திக் கொண்டிருந்த போது,
தீவிரவாதிகளால் பணயமாக வைக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டவர்கள்)

இவரின் வரிகள், எனது தமிழாக்கம் செய்யப்பட்டு,
இதோ தங்களின் பார்வைக்கு….

“கசாப் இன் மரணத்திற்கு நான் ஏன் மகிழ வேண்டும்? மதத்தின் பெயரால் மனிதரைக் கொல்லத்தூண்டுவதை கபடமற்ற குழந்தைகளுக்கு போதிப்பது நின்றால் மட்டுமே நான் மகிழ்வேன்.

அறியாமை என்பது இறைவனுக்கு பல முகங்களை கொடுத்தது, ஆனால் இறைவன் ஒருவனே. எனவே மதமும் ஒன்றே மற்றும் அந்த மதம் மனித நேயம் என்பதே.

கசாப் இது போதிக்கப்படாதவன்.

கசாப் –ன் மீது எனக்கு இரக்கம் வருகிறது.

அவனும் எனது மகனைப் போன்ற ஒரு கபடமில்லா ஒரு குழந்தையாக இருந்தவன்தான்.

ஆனால் துர் சந்தர்ப்பங்களால் தவறான மக்களிளூடே பிறந்து தவறான போதனைப் பெற்றவன்.

கசாப் என்பவன் ஒரு குழந்தையாய் இந்த அழிவு தரும் விளைவை திட்டமிடவில்லை என்பதில் எனக்கு உறுதி உள்ளது.

அவன் மூளைச்சலவை செய்யப்பட்டு, கடவுளின் பெயரால் கொலை செய்யத் தூண்டப் பட்டவன்.

அவன் தவறு செய்ய இருந்ததை அறியாமலேயே இருந்தவன்.

யாருடைய மரணத்திலும் மகிழ நான் என் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க மாட்டேன் – அது கசாப் ஆக இருந்தாலுமே!

என் குழந்தைகள் வஞ்சம் தீர்க்கும் சிந்தனை அற்றவர்களாக, வெறித்தனம் அற்றவர்களாக, அனைவரையும் நேசிப்பவர்களாக இருப்பார்கள்.

கசாப் பெற்ற விளைவுகளை ஆதரிப்பதாக நான் கூறவில்லை.

மகிழ்வதோ, திருப்தி அடைவதோ அறிவு சார்ந்த செயல் ஆகாது என்பது மட்டுமே எனது உணர்வு.

அதையும் தாண்டிய சிந்தனைகள் உள்ளன.

கசாப் –ன் முடிவுக்காக, எதிர்நோக்கிக் காத்திருந்த கடந்த இந்த நான்கு வருடங்களில், உறுதியாகக் கூறுகிறேன், புதிய கசாப் –கள் லட்சத்தில் உருவாகியுள்ளதை ஒரு சவாலாக என்னால் உணர முடியும்.

இங்குதான் உண்மையான பிரச்னையே உள்ளது. இது நிறுத்தப்படும்போது மகிழுங்கள்.”

--ஆஷிஷ் சௌத்ரி, பணியால் திரைப் பட நடிகர்.

எத்தனை ஆழமான, மனித நேயம் பொதிந்த வரிகள் இவை.

மனித நேயம் என்ற பெயரில் மரண தண்டனையையும் எதிர்க்காமல்,

திருப்தி என்ற பெயரில் அவனது மரணத்தையும் வரவேற்காமல்,
தீவிரவாதத்தை மட்டுமே தனது வலி மிகுந்த உணர்வுகளால் சாடியுள்ளார்.

அவரின் வரிகளில் உள்ள வலியான உண்மை--

ஒரு வரியில் கூற வேண்டுமானால், எனது புரிதலில் இதோ---

“ தீவிரவாதத்தை வெறுங்கள், தீவிரவாதியை அல்ல - தீவிர வாதியும் மனிதனே ! ”

தீவிரவாத்தை தனது மனித நேயத்தால் இவர் உண்மையாகவே வென்று விட்டார் என்றுதான் தோன்றுகிறது.

----- இதுதான் கலப்படமில்லாத உண்மையான மனித நேயம்…


பண்புடன் மங்காத்தா


(எனது தமிழாக்கத்தில் நான் கொண்டுள்ள நம்பிக்கையில், இந்த படைப்பு தரமானது என்ற நம்பிக்கையில், இதை பதிவேற்றியுள்ளேன்)

(இதை மறுபதிவு செய்து பரப்பினால், மனித நேயத்தை பரப்பியதற்கு அனைவருக்கும் நன்றி கடன் பட்டவன் ஆவேன் என்பது உறுதி. )

எழுதியவர் : மங்காத்தா (22-Nov-12, 2:02 pm)
பார்வை : 3069

மேலே