அடிக்க அடிக்க அம்மியும் நகருகிறதா..? உயிர் உள்ளவரை ஈழத் தமிழர்களுக்காக பாடுபடுவேன் என்கிறார் ராம் ஜெத்மலானி..?!

வைக்கோ, சீமான், குளத்தூர் மணி, கோவை ராமகிருஷ்ணன், பழ.நெடுமாறன் போன்றவர்களாலும் மற்றைய தமிழ் தேசியத்தை உரத்துப் பேசும் தலைவர்களாலும் இன்று ஈழத் தமிழர்கள் விவகாரம் பேசு பொருளாகி வருகின்றன. அமெரிக்க ஐரோப்பிய அரசுகள் இலங்கையில் நல்லிணக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்று கூற ஆரம்பித்து விட்டன. தமிழ் நாட்டில் உள்ள இருபெரும் கட்சிகள் ஐ.நா.வில் மனு கொடுப்பது அறிக்கை விடுவது என்று தவிர்க்கவே முடியாமல் பேசி வருகின்றனர்.

இந்நிலையில் தான் திரு வைக்கோ அவர்கள் "ஈழத்தில் இனக்கொலை - இதயத்தில் ரத்தம் " என்ற நூலின் ஆங்கில மற்றும் ஹிந்தி மொழியில் பதுப்பிது இவற்றுடன் இலங்கை போர் தொடர்பான குறுந்தட்டை வெளியிட்டார் டெல்லியில்.இந்த புத்தக அறிமுக விழாவிற்கு முன்னாள் மதிய சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞரும் ஆனா ராம் ஜெத்மாலினி தலைமை ஏற்க, முன்னாள் உச்ச நீதி மன்ற நீதிபதி சச்சார் இந்த பதிப்புகளை வெளியிட மூத்த பத்திரிக்கையாளர் குல்தீப் நய்யார் பெற்றுக் கொண்டார். பல்வேறு கருத்துக்களை பேசினார்கள்.

இலங்கைக்கு அமைதிப்படை அனுப்பியதே தவறு என்றார் ராம் ஜெத்மாலினி அவர்கள். இனி வாழ்நாள் முழுதும் அதாவது உயிர் உள்ளவரை ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பேன் என்று கூறியுள்ளார். போகட்டும் இப்பவாவது வட இந்திய பிரபலங்கள் ஈழத் தமிழர்களுக்காக குரல் குடுக்க வந்துள்ளதை வரவேற்போம், மற்ற ஏனைய வட இந்திய தலைவர்கள் மற்றும் கட்சியினர் குரல் கொடுப்பதற்கு வைக்கோ மற்றும் ஏனைய தமிழ் தேசியம் பேசுபவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரதிய ஜனதா கட்சியினரைப் பொறுத்தவரை மாநிலத்திற்கு ஒரு கொள்கை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறி விட்டார்கள். காங்கிரஸ் கட்சியினரும் அதுபோலவே, இவர்களை அப்படியே பின்பற்றும் இடது கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்று இருக்கையில்,

ராம்ஜெத் மாலனி குரல் கொடுப்பது வட மாநில அறிவுசார் மக்களிடம் இந்த இலங்கைப் பிரச்சனையைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்ள உதவும். ஆக, அடிக்க அடிக்க அம்மி நகர ஆரம்பித்து உள்ளது என்று கருதலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (27-Nov-12, 5:10 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 164

மேலே