காதலும் கடந்து போகும்!

கைகோர்த்து விளையாடிய தோழி, தோழர்௧ளின் எதிர்பாரா மாற்றம்!
என் வாழ்கையின் பாதையைப் பின்நோக்கு தள்ளியது!
மௌனம் என்ற மொழியைக் ௧ற்றுக்கொடுத்தது!

அறியா பருவம், அழிந்தது; என் அரும்பு மீசையால்!
நேசிக்க நெஞ்சமில்லை, இருப்பினும் ஆசைக்குப் பஞ்சமில்லை!

ஏங்கித் தவித்தேன், ஏங்கக்களை தீர்ப்பதற்கல்ல!
நெஞ்சம் கிடைக்குமா? என்னைத் திறப்பதற்கு!

எப்போழுதோ கைகோர்த்து பழகியத் தோழி!
காணமாட்டால் இவளும், கண்டுவிட்டேன் எத்தனையோ; என்றது உள்ளம்

கண் இமைக்கும் நேரத்தில் உடைந்துப் போனது என் எண்ணங்கள்
அவள் என் பெயரை உச்சரித்த அந்த நொடியில்!

இத்தனை நாள் எங்கிருந்தன இந்த உணர்வுகள் என்னுள்!
குழம்பினேன் அவளின் கூக்குரளில்!

அவள் நோக்கும் எண்ணம் புரியவில்லை; இருந்தும்,
என் மனம் அவளை விட்டு பிரியவில்லை!

எனக்கு முறையாக இருந்தாலும், மூத்தவளாக போய்விட்டால்!
இருந்தாலும் என் ஆசைக்கு முட்டு போடவில்லை!

மெய்மறந்தேன் அவள் பேச்சில், ஏற்கவில்லை அவற்றின் அர்த்தங்களை, அவளை ரசித்ததால்!

நல்லத் தருணங்கள் தாரளமாகக் கிடைத்தும்,
சொல்ல முடியவில்லை; பிரி்ந்து விடுவாளோ என்று!




காலங்களும் ஓடின, கவலைகளும் கூடின!
அவளை எதிர்நோக்கும் தருணங்களும் குறைந்தன,
அவளது தினசரி தரிசணம் இல்லாததால்

விலகி விட்டாளோ என்றது மனது, அழைப்பதெப்படி!
என்று அடைத்து வைத்தேன் என்னுயிரினுள்ளே!

மீண்டும் தொடர்ந்தது எங்கள் நட்(பூ), உள்ளிருக்கும் காதலால்!
சொல்ல முயன்றேன் என் காதலை,
வேண்டாம் என்றாள்; உறவுக்கு பதில் சொல்ல வேண்டுமென்றாள்; நீயா? இப்படியென்றால்;

நண்பர்களாய் இருப்போமமென்றேன், மறுத்தாள்; பின் மன்னித்தாள்!
நண்பர்களாய் மாறினோம்; அவளுக்காக!
உள்ளிருக்கும் இந்த இருதலைக்கொல்லி எறும்பு,
காதலையே முன்னுக்குத் தள்ளியது, அதனால் முயற்சித்தேன்;
மீண்டும் அவளிடம் தோற்றேன்!
அவளை காயப்படுத்த விரும்பாமல், என்னைக் காயப்படுத்திக்
கொண்டு விலகினேன்!

புதியவளாய் வந்தால், என்னை கொஞ்சம் புரிந்துக்கொள் என்றாள்!
நட்பின் எல்லைக்குள் நில் என்று என்றாள்!!
காயப்பட்டவனுக்கு காதலே பெரிதென்றேன்!
அதனால் நீ என்னை விட்டு விலகென்றேன்!

விலகத்தெரியாமாலல்ல சில வலிகளை வைத்துக்கொள்ள முடியாமல்,
மன்றாடினாள்; இருதியில் தோற்றாள்!
இருந்தாலும் காதல் என்ற சொல்லுக்கே நம்பிக்கையில்லாதவளாய்,
நாடகமெற்றாள்!

இனிதாய் நகர்ந்தன; இரவும், பொழுதும்!
அவளை அதிகம் கண்டதில்லை, இருந்தும்
அவளின் நினைவுகளில் என் நாட்கள் ஓடின!


நாட்கள் செல்ல, செல்ல, தனியாய் ஏங்கித் தவிக்கின்றேனோ;
என்றது சில சந்தர்பங்கள்!
அவள் என்னை விட்டு விலகுவதைப்போல் (எண்ணங்கள்),
என்னையும் அவளிடமிருந்து கொஞ்சம் விலகச் செய்தது; முழுதாயல்ல!

மீண்டும் அவளை ஒருத்தருணத்தில் அணுகினேன்,
அன்றுதான் சுக்குநூறாய் நொருங்கினேன்; அவள் சொன்ன வார்ததையால்!
விட்டு விலகுவதே இனிதேன்றாள், மன்றாடினேன்; மறுத்துவிட்டாள்!

மறப்பதெப்படியென்று அவளிடம் இருந்து நான் கற்றுக் கொள்ளவில்லை!
அதனால் தொடர்கிறேன் என் காதலை, நினைவுகளுடன்...

எழுதியவர் : Gopiji (6-Dec-12, 7:09 pm)
சேர்த்தது : Gopiji
பார்வை : 426

மேலே