வடை

ஒரு ஊரில் வழக்கம்போல் ஒரு பாட்டி.
அவர் ஒருநாள் வடை சுட்டார். அதனை காக்கா ஒன்று சுட்டு சென்று மரத்தில் சாப்பிட அமர்ந்தது. அதனை கண்ட நரிக்கு வடையை சுட ஆசை. நேராக சென்று காக்காவிடம் கேட்டது நீ நன்றாக பாடுவாயாமே ஒரு பாட்டு பாடு என்றது. அதற்கு காக்கா சொன்னது இந்த வடையை நீ சுட வேண்டாம். இந்தா பாதி வடை என்றது. அதனை பெற்ற நரி நேராக வீடு சென்று சின்ன நரி (நரியின் குட்டி) க்கு கொடுத்தது.பின் அந்த வடை வந்த கதையினை சொன்னது. நரிக்குட்டி வருத்தமடைந்து நேராக நரியையும் கூட்டிக்கொண்டு காக்காவிடம் வந்து அதனையும் கூட்டிக் கொண்டு நேராக பாட்டி வீடு வந்தது. பாட்டிக்கு ஆச்சரியம். என்ன விஷயம் என விசாரித்தார் பாட்டி. அதற்கு குட்டி நரி சொன்னது பாட்டி பாட்டி நீங்கள் சுட்டவடையை சுட்ட காக்காவிடம் சுட்ட நரி எனக்கு தந்தது. ஆனால் மற்றவர்கள் உழைப்பை திருடுவதை விட உண்மையாக உழைக்க நான் ஆசைப்படுகிறேன். எனவே எங்களுக்கு வடை சுட கற்றுக் கொடுங்கள் என்றது. அதில் மகிழ்ந்த பாட்டி எவ்வாறு வடை சுடுவது என கற்று தந்து ஆளுக்கொரு வடையையும் தந்து வழி அனுப்பினார்.
பழமொழி : ஒருவனுக்கு பசியை அந்த சமயம் போக்குவதை விட அவனுக்கு மீன்பிடிக்க கற்று கொடுப்பது நல்லது (எந்த நாட்டு பழமொழியோ)

எழுதியவர் : கனகவேலு கள்ளக்குறிச்சி (16-Dec-12, 3:04 pm)
Tanglish : vadai
பார்வை : 397

மேலே