தனி மனிதன் திருந்தினால்' அய்யா... நிறுத்துங்கள் உங்கள் நீதி போதனையை..!

தனி மனிதன் திருந்தினால்' அய்யா... நிறுத்துங்கள் உங்கள் நீதி போதனையை..!

உலக மயமாக்கலின் கலாசார சீரழிவு தான் பாலியல் வன்கொடுமை..! அவை மட்டும் அல்ல அணைத்து சமூக அவலங்களுமே.
எவ்வளவு பெரிய மோசடித்தனம் நான் நீங்கள் நாங்கள் நீ அவர்கள் அடங்கியது தான் சமூகம். அவ்வளவு பேரும் திருந்துவோம் நல்லவனாக இருக்க முயற்சிப்போம்..! என்று சொல்வது.

தனி மனிதன் திருந்தினால் சமூகம் திருந்தும் என்ற பழைய இத்துப்போன கருத்துக்களை கூறுகிறது ஒரு பெரும் கூட்டம், இந்த அறிவு மோசடி செய்யும் இந்த கூட்டத்தினர், இவ்வளவு அப்பாவியாக ஆங்கிலேயே ஐரோப்பிய கணவான்கள் சொல்லிய கருத்துக்களை இவர்களே கண்டு பிடித்தது போல வாந்தி எடுத்து வருகிறது. இவர்கள் மட்டும் அல்ல பல டுபாக்கூர்கள் இணையத்திலும் சரி பொதுவிலும் சரி இவ்வாறு கருத்து சொல்ல ஆரம்பித்து வருகிறார்கள்.

சமூகம் என்றால் என்ன..? அரசு என்றால் என்ன..? என்று எந்த அரசியல் புரிதலும் படிப்பும் இல்லாமல், தனி மனிதன் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என்று கூறுவதின் மூலம், என்றைக்குமே இந்த சமூகம் திருந்தாது என்ற முடிவுக்கு மக்களும் அறிவுசார் மக்களும் இடைநிலை சமூக அறிவாளிகளும் வரவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே..இந்த தனிமனிதன் திருந்த வேண்டும் என்ற சொல்.

மக்கள் சரியில்லை.மக்கள் திருத்த மாட்டார்கள், மக்களுக்கு அறிவே இல்லை, அது எப்போதும் வராது, முதலில் வீட்டில் இருந்து துவங்க வேண்டும் நல்ல பண்புகளை,அறவியல் ஒழுக்கலாறுகளை.அப்படியே அது பக்கத்துக்கு வீடு பக்கத்துக்கு தெரு என்று பரவி கிராமம் நகரம் என்று மக்கள் திருந்தி விடுவார்கள் அல்லது 100 சதவீத அக்மார்க் நிலையை அடைந்து விடுவார்கள் என்று சொல்வது ஒரு பெரும் அறிவு மோசடித்தனம். டெங்கு சிக்கன் குனியா போன்ற வியாதிகள் தான் அவ்வாறு பரவ முடியும். மக்களையும் மக்களை கொல்ல முடியும்.

போய் நல்லா படிங்கப்பா ..! அரசியல் என்றால் என்ன..? சமூகம் என்றால் என்ன..? மக்கள் என்றால் என்ன..? எவ்வாறு சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. என்றெல்லாம் எதுவுமே தெரியாமல் தனி மனிதன் திருந்தினால் சமூகம் திருந்திவிடும் என்று மொக்கையைப் போடுகிறது பெரும் டுபாக்கூர்கள் கொண்ட அறிவு மோசடிக் கும்பல்.

தொடர்ந்து இவ்வாறு கூறிக்கொண்டே இருக்கும் மொக்கைகளின் கண்ணுகளில் மூடை மூடையாக மண்ணை அள்ளிக்கொட்ட வேண்டும்.
உங்களுக்கெல்லாம் எதற்குடா கண்கள்..? என்று.

மீள்சிறகு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Dec-12, 10:56 am)
பார்வை : 1132

சிறந்த கட்டுரைகள்

மேலே