இந்த ஆண்டின் சிறந்த மனிதரா ஒபாமா..? டைம் பத்திரிக்கை அறிவிப்பு ..!

இந்த ஆண்டின் சிறந்த மனிதரா ஒபாமா..? டைம் பத்திரிக்கை அறிவிப்பு ..!

கலாசார ரீதியாகவும் மக்கள் தொகை ரீதியாகவும் மாறிவரும் அமெரிக்காவின் அடையாளமாகவும் நாட்டின் சிற்பியாகவும் ஒபாமா திகழ்கிறார் என்று விளக்கத்தை சொல்லி இந்த ஆண்டின் மிகச்சிறந்த மனிதர் ஒபாமா என்று தனது அட்டைப் படத்தில் போட்டுள்ளது அவரின் படத்தை டைம் பத்திரிக்கை.

இதற்கு பல விமர்சனங்கள் எழுதி பிரித்து மேய்ந்து விடுவார்கள் சில பதிவர்களும் சில இணையங்களும் என்றாலும் நாமும் நமது பார்வையினை வைப்போம்.

இந்த இதழ் தான் 2008 - ம் வருடம் இதே போன்று அன்று அறிவித்து தன்னையே சொரிந்து கொண்டது. அந்த வருட செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் அமெரிக்காவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது என்று மூடி மறைக்கவே முடியாமல் அறிவித்தார்கள். ஒருவேளை அந்த அறிவிப்பை வெளியிடுவார் பராக் ஒபாமா என்று இருக்குமோ..? இருக்கலாம்.

இந்த வருடம் ஆக மிகச்சிறந்த மனிதர் ஒபாமா என்று அறிவித்துள்ளதற்கு என்ன என்ன காரணங்கள் இருக்கும்..?

இந்தியாவில் அந்நிய முதலீட்டுக்கு அதாவது தங்கள் பகாசுர நிறுவனங்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்வதற்கு அனுமதியை போராடி வழங்கியமைக்கு.

சிரியாவில் ஒருவழியாக அரசு எதிர் போராட்டக்காரர்களுக்கு ஆயுதம் வழங்க ஒப்புதல் பெற்றது.

எகிப்தில் புதிய அதிபர் அதிகார குவிப்பை தடுத்து நிறுத்தியது.

மியன்மாரில் அகலமாக ஆழமாக காலூன்றியதின் மூலம் ஒரு இருபது வருட முயற்சியில் வென்றதற்கு,

ஈரான் நாட்டின் மீது போர் தொடுப்பதற்கு அணைத்து வித வேலைகளையும் எய்தும் செய்தும் முடித்து விட்டதற்கு.

இந்தியாவில் முதலீடு செய்வதின் மூலம் அடுத்த வருடங்களில் புள்ளி ஐந்து சதவீத வளர்ச்சி உருவாகும் நிலையை கொண்டு வந்ததற்கு.

தங்கள் நாட்டில் இருந்து அந்நிய நாடுகளின் நிறுவனங்களுக்கு குறிப்பாக இந்திய மென்பொருள் கம்பனிகளுக்கு அதிக வரியை உயர்த்தி,
அமெரிக்க நாட்டிலேயே வேலை வாய்ப்பை உருவாக்குபவர்களுக்கு வரிச்சலுகை வழங்கியது.இவையெல்லாம் பொருளாதார ரீதியிலான வளர்ச்சிக்கு, அதென்ன மக்கள் தொகை ரீதியான மாறிவரும் அமெரிக்காவின் அடையாளம்..? ஒருவேளை இதில் ஏதும் உள்குத்து இருக்குமோ என்ற சந்தேகம் வருகிறது.

அதாவது 'வால் ஸ்ட்ரீட்' போராட்டங்கள் நடந்து கொண்டே இருக்கின்றன இன்னும் முடிவுக்கு வரவில்லை. 'வி த 99 பெர்சண்ட்
மூவ்மெண்ட் ' என்றெல்லாம் மக்கள் போராட்டங்கள் பற்றி எரியத் துவங்கி விட்டன. எனவே இவர்களிடம் இருந்து, மக்கள் தலைவர்கள் வந்து விடக்கூடாது என்பதிலும்,

எங்கே அமெரிக்க மக்கள் இவர்களிடம் போய் இணைந்து கொண்டு விடுவார்களோ என்ற அச்சத்தின் காரணமாக, துப்பாக்கி கலாசாரத்தை உருவாக்கி, ஸ்லீப்பர் செல்களைப்போல, அமெரிக்க குழந்தைகளை கொல்வதை நோக்கி பயன்படுத்தி விட்டு, அய்யோ.. ஐயோகோ..! மிகப்பெரும் துயரம் அமெரிக்காவில் நிகழ்ந்து விட்டது என்று உலகையே பச்சாதாபம் கொள்ள வைத்ததற்கும் அப்படியே இந்த போராடும் மக்களை மடை மாற்றியதற்கும் அல்லது பெரும் கவனங்கள் இவர்கள் மீது உருவாக விடாமல் தடுத்ததற்கும் என்று இருக்குமோ..? உலகில் சிறந்த மனிதர் என்ற பட்டம்.

இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக் கொள்வோம். ஆனால் ஏராளமான காரணங்களை சொல்ல முடியும்.

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Dec-12, 3:20 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 186

சிறந்த கட்டுரைகள்

மேலே