இந்தியாவே அலறுகிறது...! குரல் கொடுப்பவர்களின் இரட்டைமுகங்கள்...! ஆனாலும்..?

இந்தியாவே அலறுகிறது...! குரல் கொடுப்பவர்களின் இரட்டைமுகங்கள்...! ஆனாலும்..?

மாணவர்கள், மாதர் சங்க அமைப்புகள், ஊடகங்கள், அரசியல்வாதிகள் என எல்லோரும் ஒருமித்த குரலில் கடந்த சில நாட்களாக புதுதில்லியில் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக...குற்றம் செய்தவர்களை கடுமையாக தண்டிக்கவேண்டும் எனவும் போராட்டங்கள் தொடர்கிறது...ஏன் அவர்களை உடனடியாக தூக்கில் தொங்கவிட வேண்டும் எனவும்...

அந்த அக்கிரமத்தை செய்தவர்களை தண்டிக்கவேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை...அதற்காக போராடுபவர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்...

ஆனால் அவர்கள் இந்த போராட்டங்களை மனசாட்சியை கொண்டு நடத்துகிறார்களா?...

காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், மத்திய இந்தியாவில் மலைவாழ் பெண்களுக்கும், பல இடங்களிலும் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்முறை நடந்துகொண்டுதானிருக்கிறது...

ஏன் ஈழத்தில் நடந்தவை இந்த போராட்டக்காரர்களுக்கு எதுவும் தெரியாதா? அந்த மனித மிருகத் (ராட்சசபக்சே)திற்கு நம் நாடு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தபோது இவர்கள் என்ன செய்தார்கள். குறைந்தபட்சம் கண்டனம் கூட செய்யவில்லையே...

இந்நிகழ்விற்கு காட்டு கத்து கத்தும் ஊடகங்கள், மனித உரிமையாளர்கள், நடிகர்கள், மாதர் சங்க அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகள் ஏன் காசுமீரிலும், வடகிழக்கு மாநிலங்களில், பசுமை வேட்டை நடக்கும் இடங்களில், ஈழத்தில் நடக்கும் அநியாயங்களை எதிர்த்து குரல் கொடுக்காதது ஏன்?...

எல்லோரின் மனசாட்சிதான் இதற்கு பதில் சொல்லவேண்டும்...

இதற்காக போராடுபவர்கள் எல்லோருக்காகவும் போராட முன்வரவேண்டும்...

நன்றி
சாரதாதேவி முத்துராமலிங்கம்.

இவையெல்லாம் தேவையில்லை என்ற கருத்தே, பொதுவான மக்களிடம் காணப்பட்டு வருகின்றன. இன்று அதே டெல்லியில் அணைத்து மகளிர் அமைப்புகள் ஜனாதிபதி மாளிகை முன் குவிந்து விட்டனர். பொதுவாக நாடாளுமன்ற பாதையில் யாரும் ஊர்வலமாக செல்வதற்கு அனுமதியில்லை..என்றாலும் டெல்லி பெண்கள் அமைப்புகள் குவிந்து விட்டனர் ஜனாதிபதி மாளிகை நோக்கி..போலீஸ்காரர்கள் மற்றும் ராணுவத்தினர் தடியடியோ..கண்ணீர் புகைக்குண்டோ..கைது என்றோ எதுவும் செய்யவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் ஒரு சட்டம் போட்டுள்ளார் இவ்வாறு தமிழக முதல் அமைச்சர் அவர்கள்.

சாலை மறியல் செய்பவர்கள் கட்சிகளாக இருக்கலாம் அல்லது தன்னார்வ அமைப்புகளாக இருக்கலாம்

எந்த ஒரு அமைப்பு அல்லது கட்சி யாராவது சாலை மறியல் செய்ய வேண்டும் என்று விரும்பினால்

ஒரு மாத காலத்திற்கு முன் அனுமதி வாங்க வேண்டும் என்று. இல்லையேல் அவர்களும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்று.

டெல்லிக்காரன் அமைதியாக வேடிக்கை பார்க்கும் பொழுது, தமிழனை அடித்து நொறுக்க தக்க தருணம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் திராவிட அரசியல் நடத்துபவர்கள் என்று கருதலாமா..? என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..!

சட்டத்துக்கு மேல் சட்டத்தை இயற்றுகிறார்கள்..? யாரும் எதுவும் பேசக் கூடாது..யாரும் போராடக் கூடாது என்று சொல்கிறார்கள்..முதல் குற்றம் என்றாலும் குண்டர் சட்டம் பாயும் என்கிறார்கள். பாயட்டும் இவையெல்லாம் நல்ல விசயங்கள் தான். பல கோடி ரூபாய் ஊழல் செய்பவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்வோம் என்று ஏன் எந்த அறிவிப்பும் இல்லை..?

எந்த தகுதியும் இல்லாதவர்கள் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆலோசனை சொல்கிறார்கள். இவ்வாறு தான் பொது மக்களாகிய நீங்கள் நடந்து கொள்ள வேண்டும் என்று உரத்து சொல்கிறார்கள். திராவிட அரசியலை முன் நிறுத்துபவர்கள் என்று கருதலாமா..?

இவ்வாறான நிலையில் தான் வட இந்திய ஊடகங்களும் மனித உரிமை ஆர்வலர்களும் மற்றும் பொதுவான அமைப்புகளும் கொதித்து எழுந்து விட்டார்கள். மனித உரிமை, பெண்ணுரிமை, குழந்தைகள் பாதுகாப்பு, அறவியல், மற்றும் இது சார்ந்த துறைகள் குறித்து. எழட்டும் பொதுவான மனித தர்மங்கள் குறித்த விசயங்கள்.

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (21-Dec-12, 10:58 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 137

சிறந்த கட்டுரைகள்

மேலே