புலமியின் புதிய கவிதை --கவின் சாரலன்

இனி வேண்டாம் என்று வேண்டுவோம்.
இன்னும் ஒரு போரினை என்று அழுத்த
மாக சொன்ன அற்புதக் கவிதை
போரின் கோரத்தை அவலத்தை அழிவினை ஆக்ரோஷ தாண்டவத்தை
செங்குருதி சித்திரமாய் வரைந்த
அற்புத இலக்கியம்

அயராத
அப்போர்களில் ,
அணுகுண்டுகள் பல
அமைதியாய் வீழ்கிறது..!

---அதனால் ஒரு ஹிரோஷிமாவும்
நாகாசாக்கியும் அழிந்து போகிறது


விடியலை
விளக்கம் இன்றியே ,
விதைத்தபடி உதயமாகும்
விசித்திரமற்ற செஞ்சூரியன்..!

---உயிர்வளர்ச்சிக்கு இன்றியமையாதது
சூரிய ஒளி என்று அறிவியல் ஆதவனுக்கு புகழ் மாலை சூடும்
உயிர் விதைக்கிறான் ஆதவன் உயிர்
வதைத்து அழிக்கிறான் மனிதன் .
மீண்டும் விதைக்கிறான் விசித்திரமான
சூரியன்.
அர்த்தமுள்ள வரிகள் . எங்கிருந்து
புறப்பட்டு வருகிறது இந்த வார்த்தைகள்
எச் ஜி வெல்ஸின் காலக் கருவியில்
பின் சென்று நேரில் பார்த்ததுபோல் ..
விசித்திரம்ற என்பதைவிட விசித்திரமான செஞ்சூரியன் பொருந்துமோ ?


படைகள்
பதுங்கியும் பாய்ந்தும் ,
பக்கத்திலும் கேட்கும்படி
பார்க்காத தொலைவிலும் ,


விகற்பமுடன்
வியூகங்கள் அமைத்து ,

விதிகளை மாற்றியபடி ,
விகாரமாய்த் தாக்குகிறது..!

----போர்க்காட்சிகளை அற்புதமாக
படம்பிடித்துக் காட்டும் கேமரா வரிகள்

விளைவு

நிற்காமல்
நித்திரையற்ற ,
நிகழ்கால மன ஓட்டம்
நீடித்தபடி மூச்சிரைக்கிறது..!

----கவியுள்ளத்தின் ஆதங்கம்
அழிவின் அவலத்தை ஆதிக்க வெறியர்களின் செங்குருதி ராகத்தின்
ஆலாபனையினை ஆக்ரோஷ தாண்டவத்தை குருதிப் புனலாய் பாய்ந்த பழைய வரலாற்றின் பக்கங்களை புரட்டிப் பார்த்தபோது
எழுந்த நியாயமான கேள்வி :

மகா உலக யுத்தங்கள்
மனதின் முன்னே தூவிய ,

கற்பனைகளே
கடும் உளைச்சலைத் தர ,
வேண்டாத கணங்கள் இல்லை ,
வேண்டாம் இனி உலகப்போர் என்று...!

---இன்றைய மனிதன் சிந்திப்பனா ?

கவிதையே நின் உருக்கொண்டு
வந்து கவிஞை ஆனதோ
கவிதைத் தமிழில்
நின் புலைமையை
வாழ்த்துகிறேன் தாயே
---தர நினைக்கும் அருமை நட்ச்சத்திரங்கள் ஆயிரம்
இங்கிருப்பதோ ஒருமை.ஆயினும் ஒன்றையே சொர்டுக்குகிறேன் புலமி.

--- கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (22-Dec-12, 4:26 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 191

சிறந்த கட்டுரைகள்

மேலே