திருமண வாழ்த்து - யாருக்கு..?

திருமண வாழ்த்து - யாருக்கு..?

அதென்ன தமிழனின் திருமண வாழ்த்துக்கள்
பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க..! என்று.

1. புகழ்
2. கல்வி
3. வலிமை
4. வெற்றி

5. நன் மக்கள்
6. பொன்
7. நெல்
8. நல் விதி

9. நுகர்ச்சி
10. அறிவு
11. அழகு
12. பெருமை

13. இனிமை
14. துணிபு
15. நோயின்மை
16. நீண்ட ஆயுள்

இவையெல்லாம் தமிழனனின் வாழ்த்துக்கள். ஒரு காலத்தில் இவைகளில் முக்கால் வாசியையாவது பெற்று சீரும் சிறப்புமாக வாழ்ந்தான் தமிழன்.

தற்பொழுது,

முதல் நான்கில் ஒன்றுக்கும் வழியில்லை.
இரண்டாவது நான்கில் ஏதாவது தேறுமா என்றால்
அதற்கும் வழியில்லை.
நான்காவதில் அதிலும் தோல்வி தான்.

இந்த மூன்றாவது நான்கில்
ஒன்றில் மட்டும்
தேறிவிடுகிறான் தமிழன்
அது என்னவாக இருக்கும்..?

சங்கிலிக்கருப்பு

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (24-Dec-12, 10:19 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 332

சிறந்த கட்டுரைகள்

மேலே