அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது . தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மதுரை சிவாஜி மன்றத்தின் சார்பில் அய்யா வி .என் .சிதம்பரம் 30 ஆம் நாள் நினைவு அஞ்சலி கூட்டம் நடந்தது .
தொகுப்பு கவிஞர் இரா .இரவி .சட்ட மன்ற உறுப்பினர் திரு .பழ .கருப்பையா ,கலைமாமணி கு. ஞானசம்பந்தன் ,மேடைக்கலைவாணர் என் .நன்மாறன் ,சின்னக்கலைவாணர் நடிகர் விவேக்,கவிஞர் இரா .இரவி உள்பட பலர் கலந்து கொண்டு அய்யா வி .என் .சிதம்பரம் அவர்களைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர் .

சட்ட மன்ற உறுப்பினர் திரு .பழ .கருப்பையாஉரை ;

அய்யா வி .என் .சிதம்பரம் அவர்கள் மதுரை மீனாட்சி கோயில் தர்க்காராக இருந்தபோது கோயிலில் "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்." என்று எழுதி இருந்தது .நான் சொன்னேன் தமிழ் நாட்டில்உள்ள தமிழக கோயிலில் "இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்" என்று எழுத வேண்டிய அவசியம் இல்லை ."இங்கு சமஸ்கிரத்திலும்அர்ச்சனை செய்யப்படும் " என்று எழுதி வையுங்கள் .எல்லோருக்கும் தமிழில் அர்ச்சனை நடக்கட்டும் .சமஸ்கிருத்தில் வேண்டும் என்று கேட்பவர்களுக்கு மட்டும் சமஸ்கிருத்தில் அர்ச்சனை நடைபெறட்டும் என்றேன் .அதனை ஏற்று உடன் நடைமுறைப் படுத்தினார் .அர்ச்சனை சீட்டு சமஸ்கிருத்தில் வேண்டும் என்பவர்களுக்கு தனி சீட்டும் வழங்கப்பட்டது .இதன் படி 28000 பேருக்கு தமிழிலும் 32 பேருக்கு சமஸ்கிருத்திலும் அர்ச்சனை நடந்தது .மதுரை மீனாட்சி கோயில் தர்க்காராக இருந்தபோது மீனாட்சி கோயில் குங்குமத்தை தவிர வேறு எதையும் அவர் வீட்டு கொண்டு சென்றதில்லை .

கலைமாமணி கு. ஞானசம்பந்தன் உரை ;

ஒரு நாள் கூட்டம் முடிந்து எல்லோரும் சாப்பிட எழுந்த சமயத்தில் ஒரு 10 நிமிடம் மட்டும் இவர் பேசுவார் .எல்லோரும் அமர்ந்து கேளுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார் .நீதிஅரசர் லட்சுமணன் உள்பட அனைவரும் அமர்ந்து கேட்டனர் .10 நிமிடத்தில் முடிக்க நினைத்த என்னிடம் மேலும் பேசு ! என்று கை காட்டினார் .40 நிமிடங்கள் பேசினேன் .பலரும் பாரட்டினார்கள் .அன்று நீதிஅரசர் லட்சுமணன் என் உரை கேட்டதன் விளைவாக எனக்கு சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் பேசவாய்ப்பு வழங்கினார் .சென்னையில் கலைஞர் முன்னிலையில் பேசினேன். என்னுரை கேட்டு விட்டு "சிற்றரசு "பட்டம் வழங்கினார் ."இவர் எந்த இயக்கத்தில் இருக்கிறார் என்பது தெரியவில்லை நம் இயக்கத்தில் இருந்தால் நல்லது .நான் சொன்னது கட்சி அல்ல தமிழியக்கத்தில் இருந்தால் நல்லது" என்றார் .திருமண வீட்டில் நடிகர்திலகம் சிவாஜி முன்னிலையில் பேசு! என்று ஒரு வாய்ப்பு வழங்கினார் .எனக்கு ஞானதந்தையாக திகழ்ந்தவர். என்னுடைய எல்லா விழாக்களிலும் பங்கு பெற்று உள்ளார் .நகைச்சுவை உணர்வு மிக்கவர் .என்னுடைய புது மனை புகு விழாவிற்கு அழைத்து இருந்தேன் .வந்து வீட்டைப் பார்த்து விட்டு நன்றாக உள்ளது .இந்த ஒரு வீடோடு நிறுத்திக் கொள் வேறு வீடு வேண்டாம் என்று நகைச் சுவையாக சொன்னார்கள் .

மேடைக்கலைவாணர் என் .நன்மாறன் உரை ;

மதுரையில் சிவாஜி சிலை அமைக்க முழு முதற் காரணம் அய்யா வி .என் .சிதம்பரம் அவர்கள் அன்றைய முதல்வர் கலைஞரிடம் அனுமதியை நான் வாங்கி தந்தேன் .அய்யா வி .என் .சிதம்பரம் அவர்களுக்கும் சிலை அமைக்க வேண்டும் .அதற்கான அனுமதியும் நான் பெற்றுத் தருவேன் .

சின்னக்கலைவாணர் நடிகர் விவேக் உரை ;

லாரன் காரடி இருவரில் ஒருவர் இறந்தபோது, மற்றவர் நான் பார்க்க வரவில்லை என்றாராம் .ஏன் ? என்று கேட்டதற்கு .அவன் படுத்து இருப்பதைப் பார்த்தால் எனக்கு சிரிப்பு வந்து விடும் .இதைப் பார்த்தால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்கள் .என்றாராம்.அதுபோல அய்யா இறந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை .அவர் என்னை எந்த விழாவிற்கு அழைத்தாலும் உடன் சென்று விடுவேன் .எந்த விழா முடிந்தும் அவர் வெறுங்கையோடு அனுப்பியதில்லை .இந்த விழாவில் மட்டுமே நான் வெறுங்கையோடு போகிறேன் .

என்னை அழைத்த மதுரை சிவாஜி மன்றத்தினருக்கு நன்றி .சிவாஜி படத்தில் நான் ஒரு வசனம் பேசுவேன் .அது வேறு வசனம் மட்டுமல்ல உண்மை ."சிக்ச்சுக்கு அடுத்து செவண்டா !சிவாஜிக்கு அடுத்து எவன்டா " நடிகர் திலகம் சிவாஜியோடு அய்யா வி .என் .சிதம்பரம் உள்ள அந்த புகைப்படத்தைப் பாருங்கள் .நேரு பேசினால் அவருக்கு கிழ் உள்ளவர்கள் வாய் பொத்தி மரியாதையாக கேட்பார்கள் . காந்தியடிகள் பேசுவதை நேரு கேட்கும்போது வாய் பொத்தி மரியாதையாக கேட்பார்.இதுதான் வழக்கம் .அந்த புகைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி,அய்யா வி .என். சிதம்பரம் இருவரும் வாய் பொத்தி மரியாதையாக கேட்கிறார்கள் .இருவரின் சிறந்த பண்பிற்கு எடுத்துக்காட்டு இந்த புகைப்படம்.
கர்ணன் திரைப்படம் அன்றும் சக்கை போடுபோட்டது . இன்றும் சக்கை போடு போடுகின்றது .கர்ணன் பார்ட் ஒன்று சிவாஜி. கர்ணன் பார்ட் டு அய்யா வி .என் .சி. மக்கள் திலகம் எம். ஜி .ஆரை சொல்வார்கள் "கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள் " என்று .அய்யா வி .என் .சி."கொடுத்து கொடுத்து கருத்த கரங்கள் " அந்த அளவிற்கு அள்ளி வழங்கியவர் வி .என் .சி.நாம் செய்த சேவை கண்டு புகழ் என்பது தானாக வர வேண்டும்.

மதுரைக்கு புதிதாக வந்தவர் பார்த்தார் மாடசாமி அழைக்கிறார் .மாடசாமி பேசுகிறார். என்று திரும்பிய பக்க மெல்லாம் எழுதி இருந்ததாம். புதிதாக வந்தவர் கடையில் கேட்டார் யார் ? இந்த மாடசாமி.இப்பதான் அவரே எழுதிட்டு போறார் அவர்தான் மாடசாமி என்றார்களாம் .

வயதானவர்களை பெருசு என்று ஒதிக்கி வைத்து விடுகிறோம் .அவர்களை பால் வாங்க பேப்பர் வாங்க ரேசன் கடைக்கு போக மட்டுமே பயன் படுத்தும் காலத்தில் .அய்யா வி .என் .சிதம்பரம் தன்னுடைய தாத்தாவிற்கு சிலை திறந்து பிரமாண்ட விழா நடத்தி தன் பேரன்களுக்கு தன் தாத்தா பற்றி சொல்லி வேரை அடியாளம் காட்டியவர். விழாவில் தன் காரோட்டிக்கு லட்சகணக்கில் நன்கொடை வழங்கி மகிழ்ந்தவர் .தலைமுறை இடைவெளி இன்றி எல்லோரோடும் அன்பாகப் பழகிய இனியவர் .அய்யா வி .என் .சிதம்பரம் வழியில் அவரது புதல்வர்களும் நடப்பார்கள் .

கவிஞர் இரா .இரவி உரை ;

தூங்கா நகரம் படம் வெளி வந்த நேரம் அய்யா வி .என் .சிதம்பரம் அவர்களை சந்தித்தேன் .நன்றாக நடித்து இருந்தீர்கள் நீங்கள் நல்ல மனிதர் படத்தில் வில்லனாக நடித்து இருந்தீர்கள்.என்றேன் . " என் இனிய நண்பன் வாசன்ஸ் டுடோரியல் இருளப்பன் மகன் திரு கெளரவ் தூங்கா நகரம் இயக்குனர். நண்பனுக்காக நடித்தேன் ".என்று அவர் சொன்னார் .எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை .அது அவருக்கு தெரியாது .அவர் என்னிடம் திருப்பதி சிலை ஒன்று தந்தார் .வேறு யாரேனும் தந்து இருந்தால் அவர்களிடம் எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை எனவே எனக்கு வேண்டாம் என்று திருப்பி தந்து இருப்பேன் .மிகப் பெரிய மனிதர் தந்ததை திறப்பித் தந்தால் தவறு. அவர் மனம் புண்படும் என்று பேசாமல் வாங்கிக் கொண்டேன் .அதை கொண்டு வந்து என் மனைவிடம் கொடுத்தேன் .அவளுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு .அவள் தன் பூஜை அறையில் வைத்துக் கொண்டாள் .அய்யா வி .என் .சிதம்பரம் கருப்பு வைரம் .உயர்ந்த உள்ளம் .உடலால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர். உடலால் உலகை விட்டு மறைந்த போதும் புகழால் என்றும் வாழ்வார் .

கவிமாமணி வீரபண்டியத் தென்னவன் ,கவிஞர்கள் பொற்கை பாண்டியன் ,அசோக் ராஜ் ஆகியோர் ர் அய்யா வி .என் .சிதம்பரம்பற்றி கவிதை வாசித்தனர் .கவிஞர் மார்சல் முருகன் தொகுப்புரையாற்றி கவிதை வாசித்தார் .வி .என் .சிதம்பரம் அவர்களின் புதல்வர்கள் கலந்து கொண்டனர் .வி .என் .சி.வள்ளியப்பன் மிக உருக்கமான நெகிழ்ச்சியான கண்ணீர் உரையாற்றினார் .என் தந்தை அளவிற்கு எங்களால் முடியாது என் தந்தை சூரியன் முன் டார்ச்சு அடிப்பதுப் போன்றது .ஆனால் அவர் காட்டிய வழியில் நடந்து சாதிப்போம் .என் தந்தை இறுதி நாளில் எங்கள் ஊரில் 4000 பேர் கலந்து கொண்டனர் .அதில் 1000 பேருக்கு மேல் எங்கள் கைகளை பிடித்து உங்கள் தந்தை அப்படி உதவினார் இப்படி உதவினார் .என்றார்கள் .எங்கள் ஊர் மாணவ புத்தாடைகள் வழங்கி நன்றாக படிக்க வேண்டும் என்ற அறிவுரை சொல்வதை நான் பார்த்து இருக்கிறேன் .என் தந்தை எந்தக் கட்சியிலும் சேராதவர் ஆனால் எல்லாக்கட்சியினரோடும் சேர்ந்து பழகியவர் .முதல் கட்டமாக உங்கள் ஊரில் மருத்துவ வசதி செய்து தர உள்ளோம் .நானும் என் தம்பிகளும் அவர் விட்டு சென்ற பணிகளை அவர் வழியில் தொடர்வோம் என்று சொல்லி அனைவருக்கும் நன்றி கூ றி முடிக்கின்றேன் .

எழுதியவர் : இரா .இரவி (24-Dec-12, 12:08 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 207

மேலே