ஒரு கவிஞன் உதயமாகிறான்..... அடடே ஆச்சர்யக் குறி !!!!!

என் நீண்ட நாள் திட்டம்
கவிதை எழுதுவது...
குறுகிய நாள் திட்டம்
கவிஞராவது...

கொஞ்சம் புள்ளி.. கொஞ்சம் கமா...
கொஞ்சம் ஆச்சர்யக் குறி
கைவசம் இருக்கிறது…
வார்த்தை?
பேசுவது வார்த்தை தானே....
ஒன்றுக்கு கீழ் ஒன்று
மடித்துப் போட்டுக்கொள்ள உத்தேசம்..!

தென்றல்..கனவு...தூக்கமின்மை
கொஞ்சம் பூ... என காதலுக்கும்....
ஓ சமுதாயமே.. ஒன்னுவிட்ட சமுதாயமே
எனக்கு மட்டும் ஏன்...எதெற்கு...எப்படி...?
என்ற கேள்விகளால் இந்த சமூகத்திற்கும்....
கவிதை தயாராகிக் கொண்டிருக்கிறது...

அதைப் படித்துவிட்டு
காறித் துப்பினாலும்
முதல் பரிசு கொடுத்தாலும்
அவமானப் படப்போவது நீங்கள் தான்

எப்படி?
பரிசு கொடுத்தால்...
இன்னும் அதிகமாய் இங்கேயே எழுதுவேன்.
காறித்துப்பினால்..
வெறெங்காவது என
என் கிளையை விரிவு படுத்துவேன்...

எழுதிக்கொண்டே இருப்பது என் நோக்கம்....
ஏனெனில்..
முதல்லருந்து படிங்க...

எழுதியவர் : ஆண்டன் பெனி (27-Dec-12, 9:58 am)
பார்வை : 188

மேலே